/* */

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம்

தருமபுரியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பொதுமக்களிடத்தில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம்
X
தருமபுரியில் வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி துண்ட பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தொழிலாளர் விரோத கொள்கைகளை திரும்பப்பெற தொடர் போராட்டத்தை வலியுறுத்தி பொது மக்களிடத்தில் தருமபுரியில் இன்று நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.

தேசிய பணமாக்கும் கொள்கை உள்ளிட்ட எந்த பெயராலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும்,தொழிலாளர் சட்ட தொகுப்புகள் நான்கையும் கைவிட வேண்டும்,மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்,வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 7500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்,நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி நகரங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும்,அங்கன்வாடி சத்துணவு மற்றும் இதர திட்ட ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தையும் சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்,கொரோனா பெருந்தொற்றில் பணிபுரிந்த முன் களப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பும் காப்பீடு வசதிகளும் வழங்க வேண்டும், விவசாயம் கல்வி மருத்துவம் மற்றும் அத்தியாவசிய மக்கள் பயன்பாட்டு துறைகளில் பொது முதலீட்டை அதிகபடுத்தி செல்வவளம் மிக்க அவர்களிடமிருந்து சொத்து வரி வசூலித்து இதற்கான நிதியை திரட்டி தேசிய பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டி புனர் நிர்மாணம் செய்ய வேணடும்,பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து அனைத்து பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனையொட்டி தருமபுரி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது .இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எல்.பி. எஃப் மாவட்ட தலைவர் அன்புமணி, ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாநில செயலாளர் கோவிந்தராஜ் சி.ஐ.டி.யு. சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

Updated On: 20 March 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...