/* */

தர்மபுரியில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

75 வது சுதந்திர தின விழாவில் கலெக்டர் திவ்யதர்ஷினி கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

HIGHLIGHTS

தர்மபுரியில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
X

சுதந்திர தின விழாவில் கொடியேற்றி மரியாதை செலுத்திய தருமபுரி கலெக்டர்.  

தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நாட்டின் 75வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டார். அமைதியையும், சமாதானத்தையும் வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்கள் வானில் பறக்க விடப்பட்டன. திறந்த வாகனத்தில் சென்று காவல்துறை அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.52.53 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். கோவிட் பெருந்தொற்று காலத்தில் சேவையாற்றிய பல்வேறு துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், கூடுதல் ஆட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Updated On: 15 Aug 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு