/* */

75 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படையினர் சைக்கிள் பேரணி

75 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படையினர் சைக்கிள் பேரணி

HIGHLIGHTS

75 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படையினர் சைக்கிள் பேரணி
X

தர்மபுரியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சைக்கிள் பேரணி நடத்திய மத்திய பாதுகாப்பு படையினருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை நினைவுகூரும் வகையில் 'ஆசாதி கா அம்ருத் மகா உத்ஸவ்' என்ற தலைப்பில் மத்திய பாதுகாப்புப் படை (சி.ஆர்.பி.எப்) சார்பில் 15 வீரர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி நேற்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலிருந்து 22.08.2021 அன்று டெல்லிக்கு புறப்பட்டது.

தமிழகத்தில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவர்கள் வாழ்ந்த திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக சைக்கிள் பேரணி கர்நாடகா செல்கிறது. அங்கிருந்து ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் வழியாக 2,850 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து 15 வீரர்களும் காந்தி ஜெயந்தி தினமான அக்.2-ம் தேதி டெல்லி ராஜ்காட்டை சென்றடைகின்றனர்.

அந்த வகையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலிருந்து டெல்லியை நோக்கி தொடங்கிய இப்பேரணியானது இன்று (30.08.2021) பிற்பகல் 6:00 மணியளவில் தருமபுரி மாவட்டத்திற்கு வந்தடைந்தது. இதனையொட்டி இச்சைக்கிள் பேரணியினை வரவேற்கும் நிகழ்ச்சி தருமபுரியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் சைக்கிள் பேரணியினை வரவேற்றார். மேலும் சைக்கிள் பேரணியை கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடத்தி வரவேற்றனர்.

Updated On: 31 Aug 2021 2:49 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  2. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  3. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  6. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  7. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  8. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  9. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு