/* */

கொள்கை பூர்வமான பட்ஜெட்: திராவிடர் கழக தலைவர் வீரமணி

தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் ஒரு கொள்கை பூர்வமான பட்ஜெட் என தருமபுரியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்

HIGHLIGHTS

கொள்கை பூர்வமான பட்ஜெட்: திராவிடர் கழக தலைவர் வீரமணி
X

தருமபுரியில் நடைபெற்ற விழாவில் பேசும் தி. க தலைவர் கி. வீரமணி

தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கபட்ட நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் மன்ற உறுப்பினர்களுக்கு அதன் மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன் தலைமையில் பாராட்டு விழா தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி புதியதாக பொறுப்பேற்றவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 10 மாதங்களில் இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என அனைவராலும் பாராட்டப்பட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் முதன்முறையான தனியாக பட்ஜெட்டை தாக்கல் செய்யபட்டது. ஆற்றல் மிகுந்த முதல்வருக்கு ஆற்றல் மிகுந்த நிதியமைச்சர் அமைந்திருக்கிறார் என்பதற்கு அடையாளமாக சிறப்பாக தாக்கல் செய்யபட்ட பட்ஜெட் ஒரு கொள்கை பூர்வமான பட்ஜெட் என்றார்.

மேலும் இதுவரை தாக்கல் செய்த பட்ஜெட்டில் வரவு செலவு திட்டம் மட்டுமே இருக்கும். ஆனால் தற்போது தாக்கல் செய்யபட்ட பட்ஜெட்டில் கொள்கை அடிப்படையில் அமைந்துள்ளது. நீதிகட்சி ஆட்சி காலத்தில் இருந்து சமூக நீதி அடிப்படையாக கொண்டு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் காலம் தொட்டு இவர்கள் அடிப்படையிலே திராவிடர் மாடல் ஆட்சி இருக்கும் என்று சொல்லி அதற்கேற்ப ஒரு திட்டத்தை வரையறுத்து ஏழை எளிய மக்கள் குறிப்பாக பெண்கள் சமூதாயத்தில் ஒடுக்கபட்டவர்கள் எல்லோருக்குமே தனி வாய்ப்பளிக்க கூடிய வகையிலேயே செய்திருக்கிறார்கள்.

பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாணவிகளுக்கும் மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்குவது, இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் புதியதாக எந்தவித வரியும் விதிக்கப்படாத சிறந்த பட்ஜெட் என்று கூறினார்.விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு. தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளாக வேளாண்மை துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. மின்சார வாரியம் கடனில் இருந்தாலும் அதையும் சமாளித்து இலவச மின்சார திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது சிறப்பு. அதே போல் தொடரந்து எல்லா தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் சிறப்பான பட்ஜெட். ஒடுக்கப்பட்ட சமூதாயத்தை சேர்ந்த இருளர்கள், நரிகுறவர்கள் ஆகியோருக்கு தற்போதைய பட்ஜெட்டில் இடஒதுக்கீடு அளித்து அவர்களது வாழ்வில் விளக்கேற்றி வைத்துள்ளனர் என்று கூறினார்.

இந்நிகழ்வில் மண்ட தலைவர் தமிழ்செல்வன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், நகர் மன்ற தலைவர் லட்சுமி மாது, மாவட்ட தலைவர் பரமசிவம் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 March 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  4. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  5. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  6. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  7. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  9. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்