/* */

ஏஐடியூசி எலக்ட்ரீசியன் தொழிற்சங்கத்தினர் மார்ச் 28, 29-ந் தேதி வேலை நிறுத்தம்

ஏஐடியூசி எலக்ட்ரீசியன் தொழிற் சங்கத்தின் சார்பில் மார்ச் 28, 29-ந் தேதி நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தம் குறித்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஏஐடியூசி எலக்ட்ரீசியன் தொழிற்சங்கத்தினர் மார்ச் 28, 29-ந் தேதி வேலை நிறுத்தம்
X

தருமபுரி மாவட்ட எலக்ட்ரீசியன் மற்றும் மின்வாரிய ஒப்பந்த தொழிற்சங்கத்தினரின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட எலக்ட்ரீசியன் மற்றும் மின்வாரிய ஒப்பந்த தொழிற்சங்கத்தின் சார்பில் மார்ச் 28,29 ந்தேதி நடைபெறும். அகில இந்திய வேலை நிறுத்தம் குறித்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இச்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பி.கே.முத்து தலைமை வகித்தார்.

கூட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் கே.மணி, எலக்ட்ரீசியன் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.நடராஜன், மாவட்ட பொருளாளர் தெய்வமணி, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் சின்னக்கண்ணன், உள்ளாாட்சி பணிியாளர் சங்க மாவட்டத் தலைவர் என்.மனோகரன் ஆகியோர் கோரிக்கைகள் சம்மந்தமாக பேசினர்.

கூட்டத்தில் மின் வாரியத்தில் மின் இணைப்புகள் பெற ஆன்லைன் பதிவு வந்த பின்னர் மின் வாரிய ஒப்பந்ததாரர்களிடம் கையெழுத்து பெறாமல் மின் இணைப்புகள் வழங்கப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தி 1956 மின்சார ஒப்பந்தப்படி பி லைசென்ஸ் மற்றும் மின்வாரிய ஒப்பந்ததாரர்களிடம் கையெழுத்து பெற்று மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 20 ஆண்டுகளாக எலக்ட்ரீசியன் பிரிவில் அனுபவம் பெற்ற எலக்ட்ரீசியன்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மின்கம்பி உதவியாளர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தமிழ்நாடு முழுவதும் சுமா 75 ஆயிரம் மின் கம்பி உரிமம் பெற்றவர்களுக்கு மின்கம்பி உதவியாளர் வேலை வழங்க வேண்டும்.

மின் இணைப்பு வழங்குவதற்கு முன்பு மின் உரிமம் பெற்றவர்களின் கையெழுத்து பெற்று தரும் விண்ணப்பங்களை சரிபார்த்து வாங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஏபரல் மாதம் தருமபுரி மின்சார வாரிய பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

மேலும் மார்ச் 28 மற்றும் 29-ம் தேதியில் அகில இந்திய அளவில் நடைபெறும் வேலை நிறுத்த போராாட்டத்தில் இச்சங்கத்தின் சார்பில் திரளாக கலந்து கொள்வது என முடிவு செெய்யப்பட்டது.

கூட்டத்தில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராமதாஸ், வீரமோகன், கே.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 March 2022 3:19 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...