/* */

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி: கடலூர் கலெக்டர் வழங்கினார்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 69 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாலசுப்ரமணியம் வழங்கினார்

HIGHLIGHTS

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி: கடலூர் கலெக்டர் வழங்கினார்.
X

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கடலூர் கலெக்டர் வழங்கினார்.

அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 2128 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 69 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கடலூர் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் வழங்கினார்.

710 பயனாளிகளுக்கு 13 லட்சத்து 96 ஆயிரத்து 450 ரூபாய் மதிப்பீட்டில் கல்வி உதவி தொகையும், 13 பயனாளிகளுக்கு 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திருமண உதவித் தொகையும் வழங்கப்பட்டது.

12 பயனாளிகளுக்கு 10 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் விபத்து மற்றும் மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகையும், 1323 பயனாளிகளுக்கு 28 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஓய்வூதிய உதவித்தொகையும், ஒரு பயனாளிக்கு மகப்பேறு உதவித் தொகையாக 3000 ரூபாயும், 69 பயனாளிகளுக்கு15 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இயற்கை மரணம் தொடர்பான உதவி தொகை என மொத்தமாக 69 லட்சத்து 28 ஆயிரத்து 450 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் தொழிலாளர் உதவி ஆணையர் ராமு, உஷா தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 30 July 2021 1:18 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  6. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  7. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  8. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  9. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  10. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி