/* */

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளுக்கு தற்காலிக லைசென்ஸ்

கடலூரில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தகவல்

HIGHLIGHTS

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளுக்கு தற்காலிக லைசென்ஸ்
X

கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியன்

கடலூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிக்க கலெக்டர் பாலசுப்ரமணியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நவம்பர் 04.11.2021 (வியாழக்கிழமை) தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையின்போது கடலூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க உரிமம் பெற விரும்புவோர் அரசு விதிகளை கடைபிடித்து இணையதளம் அல்லது இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்போர் வெடிமருந்து சட்டம் 1884 மற்றும் வெடிமருந்து விதிகள் 2008-ல் உள்ள விதி 84-யை முறையாக கடைபிடித்து பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் பாதுகாப்பான இடமாக தேர்வு செய்து, ஆட்சேபணை இல்லாத இடத்திற்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு முந்தைய காலங்களில் தற்போது நேர்ந்தெடுத்துள்ள இடத்தில் கடை வைக்க உரிமம் பெற்றவர்கள் விண்ணப்பத்துடன் ஏற்கனவே பெற்ற உரிய நகலினை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் உரிமம் கோரி விண்ணப்பிக்கும்போது கடையின் வரைபடம் - 6, உரிமம் கோரும் இடத்தின், உரிமையாளராக இருப்படம் ,அதற்கான பத்திர நகல் (அசல் மற்றும் 5 நகல்), உரிமம் கோரும் இடம் வாடகை கட்டடம் எனில், இடத்தின் கட்டட உரிமையாளரிடம் ரூ.20/-க்கான முத்திரைதாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்த பத்திரம், உரிமக்கட்டணம் ரூ.500/- செலுந்தியதற்கான அசல் சலான், வீட்டு முகவரிக்கான ஆதாரம் (Pan Card/Andhar Card/Family Card/Smart card),நடப்பு நிதியாண்டின் வீட்டு வரி செலுத்திய ரசீது, மனுதாரரின் பாஸ்போர்ட் அளவுள்ள வண்ணப் புகைப்படம்-2 ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை வரும் 30.09.2021 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 30.09.2021ஆம் தேதிக்குப் பின்னர் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரருக்கு, 15.10.2021 ஆம் தேதிக்கு பின்னர் தற்காலிக பட்டாசு உரிமம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Updated On: 7 Sep 2021 1:43 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்