/* */

கொரோனா பற்றிய விவரங்களுக்கு தொடர்பு எண்கள்

கொரோனா பற்றிய விவரங்களுக்கு அதிகாரிகளை தொடர்பு கொள்ள கைபேசி எண்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கொரோனா பற்றிய விவரங்களுக்கு தொடர்பு எண்கள்
X

கடலூர் மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதி மற்றும் கொரோனா தொடா்பான தகவல்களை தெரிந்துகொள்வதற்காக, கூடுதலாக பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டதுடன், அவா்களின் தொடர்பு எண்களும் வெளியிடப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது,

பொதுமக்கள் கொரோனா தொடர்பான தகவல்களைப் பெறவும், சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்கவும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து செயல்படுவார்கள்.

அதன்படி, மாதிரிகளைச் சேகரித்தல், அதற்கான முடிவுகளை தெரிந்துகொள்வதற்கு, மருத்துவர் கிறிஸ்டியை 94899 30522 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

காய்ச்சல் முகாம்கள் குறித்த தகவல்களைப் பெறுவதற்கு, மருத்துவர் லாவண்யாவை 94899 30523 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கொரோனா தடுப்பூசி குறித்த தகவல்களை பெறுவதற்கு, மருத்துவர் சசிகலாவை 94899 30524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அரசு, தனியாா் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்து தெரிந்துகொள்வதற்கு, மருத்துவர் பரிமேலழகரை 94899 30525 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், சந்தேகங்கள், புகார்களைத் தெரிவித்தும் பயனடையலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 14 May 2021 5:56 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  8. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  9. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்