/* */

கடலூரில் கவுன்சிலர் சீட் விற்கப்பட்டதாக முதல்வர் தனிப்பிரிவிற்கு மனு

கடலூரில் தி மு க கவுன்சிலர் சீட் விற்கப்பட்டதாக முதல்வர் தனிப்பிரிவிற்கு புகார் மனு அனுப்பப்பட்டது.

HIGHLIGHTS

கடலூரில் கவுன்சிலர் சீட் விற்கப்பட்டதாக முதல்வர் தனிப்பிரிவிற்கு மனு
X

முதல்வர் ஸ்டாலினுடன் வெங்கடேசன்.

தமிழகம் முழுவதும் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடலூர் அடுத்த மாலுமியார்பேட்டை பகுதியை சேர்ந்த வி.வெங்கடேசன் என்பவர் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் 18 ஆண்டுகளாக தி.மு.க.வின் தீவிர விசுவாசியாக செயல்பட்ட தனக்கு கவுன்சிலர் சீட் தராமல் பணம் வாங்கிக் கொண்டு கட்சிக்காகவும், மக்களுக்காகவும் உழைக்காதவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் சீட் ஒதுக்க முடிவு செய்திருப்பதாக கூறி உள்ளார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான வெங்கடேசன் உடனே முதல்வர் மு.க.ஸ்டாலின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில், தனது மனுவை பரிசீலனை செய்து 45வது வார்டு கவுன்சிலர் சீட் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு சடடமன்ற உறுப்பினரும், அவரை சேர்ந்தவர்களும் தான் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 1 Feb 2022 2:01 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  3. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  4. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  5. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  8. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  9. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  10. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?