/* */

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் முதலமைச்சருக்கு மனு

செங்கல்பட்டில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் முதலமைச்சருக்கு மனு அளித்தனர்.

HIGHLIGHTS

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் முதலமைச்சருக்கு மனு
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்தனர்.

செங்கல்பட்டு இந்து மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் அக்கட்சியினர் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சருக்கு மனு அளித்தனர்.

இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், சமீபத்தில் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை மோசமாகப் பேசியதோடு, பிற மதத்தினர் குறித்து வெறுப்பை விளைவிக்கும் கருத்துக்களையும் பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலிசார் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

அவர் கைது செய்யப்பட்டலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று அவர் தலைமறைவானார். அவரைப் பிடிப்பதற்கு ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

அவரது செல்போனை வைத்து அவரை காவல்துறையினர் தேடினர். முடிவில் அவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கள்ளிக்குடியில் தங்கியருப்பது தெரியவந்தது. அங்கு அவரைக் கைது செய்த காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மதவெறியோடு பேசியதாக கைது செய்யப்பட்ட மத போதகர் ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், கொரோனா தடுப்பூசியினை தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக போட வேண்டும், ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவதற்கு இலவசமாக தானியத்தை தர வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு செங்கல்பட்டு ஆட்சியர் மூலமாக அவரது அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை அளித்துள்ளதாக தெரிவித்தார்.

Updated On: 26 July 2021 5:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?