/* */

சென்னையில் அமைச்சர் ஆய்வு செய்து அனுப்பிய பேருந்து நடுவழியில் நின்றது

சென்னையில் அமைச்சர் ஆய்வு செய்து அனுப்பிய பேருந்து செங்கல்பட்டு அருகே புகை வந்து நடுரோட்டில் நின்றது.

HIGHLIGHTS

சென்னையில் அமைச்சர் ஆய்வு செய்து அனுப்பிய பேருந்து நடுவழியில் நின்றது
X

செங்கல்பட்டு அருகே நடுவழியில் நின்ற அரசு பஸ்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு பேருந்து விடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கோயம்பேட்டில் இருந்து அதிகளவு பேருந்துகள் தென்மாவட்ட மக்களுக்கு இயக்கப்படுகிறது. இந்நிலையில் பேருந்துகள் தரமாக இருக்கிறதா முறையான வசதிகள் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் இருந்து சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக மதுரை செல்லும் சிறப்பு சொகுசு பேருந்து கோயம்பேட்டில் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட பேருந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து வந்து கொண்டிருந்தது அப்போது செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே வருகை தந்தபோது, திடீரென அந்த பேருந்தில் இருந்து மளமளவென புகை வந்தது. இந்த புகை வேகமாக பரவியதால் , பேருந்தில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பயணிகள் அந்த பேருந்தில் இருந்து வெளியேறி வேறு பேருந்துக்காக காத்திருந்தனர். நீண்ட நேரமாக அனைத்து பேருந்துகளும் நிரம்பி வழிவதால் வேறு பேருந்தில் ஏற முடியாமல் பயணிகள் கடந்த ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சிக்கி தவித்து வந்தனர். கோயம்பேட்டில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு அனுப்பிய பேருந்து செங்கல்பட்டு டோல்கேட் வருவதற்குள்ளாகவே புகை வந்து நின்று போனது பயணிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

Updated On: 14 Jan 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...