/* */

செங்கல்பட்டு அருகே கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

செங்கல்பட்டு அருகே கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு அருகே கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
X

செங்கல்பட்டில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து.

செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திரா சிட்டி பகுதியில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கிவருகிறது.

இந்த தொழிற்ச்சாலையில் இன்று மாலை 6 மணியளவில் மின் கசிவுக் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் பகுதி தீயணைப்பு நிலைய வீரர்கள் நான்கு தீயணைப்பு வாகனங்களில் விரைந்துவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு தீயை வீரர்கள் அணைத்தனர்.

இந்த விபத்தில் அதிஷ்டவசமாக தொழிலாளர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. அலுவலகத்தில் இருந்த கழிவு பொருட்கள், குளிர்சாதன பெட்டிகள், முக்கிய ஆவணங்கள் என சுமார் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகியதாக தெரிகிறது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து செங்கல்பட்டு தாலுக்கா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் எரிந்த பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொழிற்சாலை நிர்வாகமும் ஈடுபட்டுவருகின்றது.

Updated On: 24 July 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு