/* */

ரப்பர் தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் நச்சுத்துகளால் ஆபத்து

செங்கல்பட்டு அருகே ரப்பர் தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் கருப்பு நச்சுத்துகள்கள் மழைநீரில் கலந்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ரப்பர் தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் நச்சுத்துகளால் ஆபத்து
X

செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் பகுதியில் உள்ள தொழிற்சாலை நச்சுத்துகள், மழை நீரில் கலந்துள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் பகுதியில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் இரப்பர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் கரும்புகையின் காராணமாக, அங்குள்ள மக்களுக்கு சுவாச கோளாறு உள்பட பல நோய்கள் வருவதாக, துறைசார்ந்த அதிகாரிகளிடம் புகார் மனுக்களை அளித்துள்ளனர். பலகட்ட போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர். ஆனால் இதுநாள் வரையில் அந்த ரப்பர் தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக செங்கல்பட்டில் பெய்து வரும் மழையால், ரப்பர் தொழிற்சாலையில் இருந்ந்து வெளிவரும் கரும் நச்சு துகள்கள், மழைநீரில் கலந்து திம்மாவரம் ஊராட்சிமன்ற கட்டிடம், நியாயவிலைக்கடை, கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவகங்கள் இயங்கும் பகுதியில் தேங்கி துர்நாற்றம் வீசிவருகிறது. இதன் காராணமாக ஊராட்சிமன்ற கட்டிடம், நியாயவிலைக்கடை, கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. எனவே அப்பகுதியில் இயங்கிவரும் ரப்பர் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடவேண்டும், அந்நிர்வாகத்தின் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 8 Nov 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?