/* */

பாஜக மாநில தலைவராக பதவியேற்கவுள்ள அண்ணாமலைக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு

செங்கல்பட்டில் பாஜக மாநில தலைவராக பதவியேற்கவுள்ள முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

பாஜக மாநில தலைவராக பதவியேற்கவுள்ள அண்ணாமலைக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு
X

தமிழகத்தில் பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பதவி ஏற்றதை தொடர்ந்து வெற்றிடத்தை உடனடியாக நிரப்புவதற்காக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலையை தமிழக மாநில தலைவராக மத்திய அரசு அறிவித்தது

சென்னை கமலாலயத்தில் பதவியேற்கவுள்ள நிலையில் திருவண்ணாமலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்லும் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், மேல்மருவத்தூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, ஆகிய இடங்களில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியின் நிர்வாகிகள் மலர்தூவி, மாலை அணிவித்து கற்பூரம் ஏந்தி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் பாரதிய ஜனதா கட்சி மட்டும்தான் சித்தாந்த அடிப்படையில் உள்ளதாகவும் தேசியம் ஆன்மீகம் இரண்டையும் மையமாக வைத்து ஆட்சி நடத்தி வருகிறது தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே பாஜகவை எதிர்த்து தான் அரசியல் செய்கிறது.

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதாகவும் ஒரு பானை சாதத்திற்கு ஒரு சாதம் பதம் அதுபோல தற்பொழுது 4 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 150 எம்எல்ஏக்களை பெற்று பாஜக ஆட்சி அமைக்கும். அதுவரை பாஜகவினருக்கு ஓய்வு கிடையாது எனவும் கட்சியில் உள்ள அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் அதற்கு நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் எனவும் தமிழகத்தில் தாமரை மலர வேண்டும் என கூறினார்.

Updated On: 15 July 2021 11:56 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  2. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  5. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  7. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  9. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!