/* */

பாலாற்றில் வெள்ளம்: செங்கல்பட்டு மாவட்டத்துக்கு அபாய எச்சரிக்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

HIGHLIGHTS

பாலாற்றில்  வெள்ளம்: செங்கல்பட்டு மாவட்டத்துக்கு  அபாய எச்சரிக்கை
X

பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: பாலாற்றின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் மழையின் காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள காவேரிப்பாக்கம் பாலாறு அணைக்கட்டில் இன்று காலை 10.00 மணி அளவில் 6322 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.தற்பொழுது இவ்வெள்ள நீரானது செங்கல்பட்டு மாவட்ட எல்லையான பாலூரில் இன்று மாலையிலிருந்து இரவுக்குள் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,

மேலும் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆற்றில் கூடுதலாக தண்ணீர் வர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைபாலத்தில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வருவாய்துறை மற்றும் பொதுப்ணித்துறையுடன் இணைந்து கீழ் குறிப்பிட்டுள்ள கிராமங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள கிராமங்கள், சாத்தனஞ்சேரி ஓரகாட்டுபேட்டை, சிங்காரச்சேரி மையூர், மாமண்டூர், பழமத்தூர், பழைய அந்தூர், படானாம், புளிப்பாக்கம், அரசர் கோயில், பள்ளிப்பட்டு, மேலச்சேரி, பாலூர், தேவனூர், ஆத்தூர், திம்மாவரம், பழவேரி, மணப்பாக்கம், உதயம்பாக்கம், ஆனூர், எலுமிச்சம்பட்டு, வள்ளிபுரம், விளாகம், பாக்கம், நெரும்பூர், பணங்காட்டுச்சேரி, நல்லாத்தூர், ஆயப்பாக்கம், வாயலூர், இரும்புலிச்சேரி, எடையாத்தூர், தண்டரை, புறஞ்சேரி, வேப்பஞ்சேரி, கடலூர், சின்ன குப்பம் ஆகிய கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம். செல்போன் மூலம் புகைப்படம் எடுப்பது செல்பி எடுப்பது போன்றவற்றை செய்யகூடாது. கால்நடைகளான ஆடு, மாடு போன்றவற்றை பாலாற்றில் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் வீட்டில் உள்ள சிறுவர் சிறுமிகளை ஆற்றின் அருகில் செல்லாமல் இருக்க பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Updated On: 17 Oct 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!