/* */

செந்துறை அருகே திரவுபதியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நடைபெற்ற கோயில் தேரோட்டம் மற்றும் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

செந்துறை அருகே திரவுபதியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா
X

குறிச்சிகுளம் கிராமத்தில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்.


செந்துறை அடுத்துள்ள குறிச்சிக்குளம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோயில் தேரோட்டம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, கடந்த 8 ம் தேதி கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேகம், பாரதம் படிப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. விழாவில் சுவாமிக்கு மஞ்சள், சந்தனம், பால், தேன், திரவியம் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து, காளியம்மன், திரவுபதியம்மன், விநாயகர் உட்பட பரிவார தெய்வங்கள் தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. தேரை கிராம மக்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து, மாலை கோயில் அருகேயுள்ள திடலில் பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில், குறிச்சிகுளம், அசாவீரன்குடிக்காடு, ஆர்எஸ்.மாத்தூர், பூமுடையான் குடிக்காடு, கஞ்சமலைப்பட்டி, நயினார் குடிக்காடு, படைவெட்டி குடிக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 26 Feb 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?