/* */

அரியலூர் மாவட்டத்தில் நாளை பட்டா திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் வருவாய் கிராமங்கள். மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் நாளை பட்டா திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர் அறிவிப்பு
X

அரியலூர் மாவட்டத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் வருவாய் கிராமங்கள்

அரியலூர் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும், விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்கள் தலைமையில் வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. முகாமில் பெறப்படும் சிறு கணினி திருத்தம் சார்ந்த மனுக்களுக்கு அன்றைய தினமே தீர்வு காணப்படும்.

நாளை டிச 01 அரியலூர்(தெ), வாலாஜாநகரம் ஆகிய கிராமங்களுக்கு அரியலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், கண்டராதீத்தம், திருமழபாடி கிராமங்களுக்கு திருமழபாடி சமுதாயகூடத்திலும், நாகல்குழி,பரணம் கிராமங்களுக்கு கழுமங்கலம் பொதுச் சேவை மைய அலுவலகத்திலும், தர்மசமுத்திரம், வங்குடி கிராமங்களுக்கு வங்குடி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், வாழைக்குறிச்சி, டி.கே.பி நத்தம் கிராமங்களுக்கு வாழைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், ஆண்டிமடம், ராங்கியம் கிராமங்களுக்கு ஆண்டிமடம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் முகாம் நடக்கிறது.

மேற்படி இந்த சிறப்பு முகாமில் சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு பொதுமக்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் மனுக்கள் அளித்து பயன் அடையலாம் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 30 Nov 2021 4:17 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு