/* */

நியமன குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் ஒத்திவைப்பு

போதிய உறுப்பினர்களின் கோரம் இல்லை என்பதால் நியமன குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் ஒத்திவைப்பு.

HIGHLIGHTS

நியமன குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் ஒத்திவைப்பு
X

அரியலூர் நகராட்சியில் ஒப்பந்தப்புள்ளி குழுக்களுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.


அரியலூர் நகராட்சியில் போதிய உறுப்பினர்கள் வராததால் நகராட்சி நியமன குழு வரி மேல் முறையீட்டுக் குழு மற்றும் ஒப்பந்தப்புள்ளி குழுக்களுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

அரியலூர் நகராட்சியில் இன்று 9:30 மணிக்கு நகராட்சி நியமனக் குழு, வரி மேல் முறையீட்டுக் குழு மற்றும் ஒப்பந்தப்புள்ளி குழுக்களுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்தல் நடைபெறுவதாக அரியலூர் நகராட்சியின் ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலரான சித்ரா சோனியா அறிவித்திருந்தார். இதனையடுத்து நகராட்சி கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் 8வது வார்டு ராஜேந்திரன், ஒன்பதாவது வார்டு மகாலட்சுமி, 10வது வார்டு இன்பவல்லி, 11வது வார்டு முகமது இஸ்மாயில், 13வது வார்டு வெங்கடாஜலபதி, ஆகிய 5 பேர் மட்டுமே வருகை தந்திருந்தனர்.

போதிய உறுப்பினர்களின் கோரம் இல்லை என்பதால் இன்று நடைபெற இருந்த நியமன குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா அறிவித்தார். கூட்டத்திற்கு 12வது வார்டு மதிமுக கவுன்சிலர் மலர்கொடி மனோகரன் மற்றும் 17வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஜீவா செந்தில் ஆகியோர் தாமதமாக வருகை தந்தனர். இதனையடுத்து கூட்டத்திற்கு வந்த கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 31 March 2022 5:42 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...