/* */

அரியலூரில் புதிய பஸ் சேவை:அமைச்சர் சிவசங்கர் தொடக்கம்

அரியலூர் மாவட்டத்தில் புதிய பஸ் சேவையை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

அரியலூரில்  புதிய பஸ் சேவை:அமைச்சர்  சிவசங்கர் தொடக்கம்
X

அரியலூர் மாவட்டம், கீழராயம்புரத்தில் புதிய பஸ்  சேவையை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


தமிழக முதலமைச்சர் பெண்களின் நலன் காக்கும் வகையில் நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று அறிவித்ததை தொடர்ந்து கூலிவேலை, வணிக நிறுவனங்களில் பணியாற்றி வரும் பெண்கள் அனைவரும் தற்போது நகர பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். மேலும் பொதுமக்களின் வசதிக்காக புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை தொடங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் கீழராயம்புரம் வழியாக அரியலூர் - செந்துறை வழித்தடத்தில் புதிய பஸ் சேவையை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து துவைக்கி வைத்தார். இந்த சேவையானது அரியலூரிலிருந்து ஆனந்தவாடி, கீழராயம்புரம் மற்றும் ஆதிகுடிகாடு வழியாக செந்துறை இடையே நாள் ஒன்றுக்கு காலை 2 முறையும், மாலை 2 முறையும் என 4 முறை இயக்கப்பட உள்ளது.

இந்த சேவையினை பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் சிறப்பான முறையில் இயக்கிட ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், அரசு போக்குவரத்து கழக கோட்டமேலாளர் ராமநாதன், கிளைமேலாளர் செந்தில்குமார், வட்டாட்சியர் குமரய்யா கலந்துகொண்டனர்.

Updated On: 19 Sep 2021 8:19 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!