/* */

அரியலூர் கலெக்டருக்கு நவரத்தின மாலை அணிவித்து நரிக்குறவர்கள் கோரிக்கை

அரியலூர் மாவட்ட கலெக்டருக்கு நவரத்தின மாலை அணிவித்த நரிக்குறவர்கள், இலவச பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

அரியலூர் நகருக்கு அருகே ராவுத்தன்பட்டி கிராமத்தில் குருவிகாரன் காலனி என்ற இடத்தில் கடந்த 50 ஆண்டுகளாக நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கி, அரியலூர் பேருந்து நிலையத்தில் ஊசி, பாசி மணி விற்பனை செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்தின் விலாசத்திலேயே வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு, பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகள் உள்ளன.

ஆனால் இவர்கள் வசிக்கும் இடம் அரசுபுறம்போக்கில் உள்ளது. அந்த இடத்தில் தங்களுக்கு இலவச வீட்டுமணை பட்டா வழங்க வேண்டும் என பலமுறைகோரிக்கை வைத்துள்ளனர். இதுவரை வீட்டுமனைப்பட்ட கிடைக்கவில்லை.

எனவே மீண்டும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நரிக்குறவர்கள், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதிக்கு நவரத்தின மாலை அணிவித்து, தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

தங்களுக்கு அதே இடத்திலோ அல்லது மாற்றுஇடம் தேர்வு செய்தோ, இலவச வீட்டுமனைப் பட்ட வழங்க வேண்டும் என நரிக்குறவர்கள் கோரிக்கை வைத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

Updated On: 16 Nov 2021 11:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்