/* */

மகள் திருமணத்தில் தந்தை கொலை: நடவடிக்கை எடுக்ககோரி காவல் நிலையம் முற்றுகை

மகள் திருமணத்தில் ஏற்படட தகராறில் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் சப்இன்ஸ்பெக்டர் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி காவல் நிலையத்தை முற்றுகை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டம், வைப்பூர் கிராமம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் தங்கையன் மகன் கண்ணன்(வயது 46). விவசாயியான இவருக்கு திருமணமாகி, கவியரசன், அரவிந்த் என்ற மகன்களும், விஜி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் மகன் அஜித்குமார்(வயது 19), என்பவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கண்ணன் மகள் விஜியை திருமணம் செய்ய கடத்தி சென்றுவிட்டதாக தெரிகிறது. கண்ணன் தனது மகள் கடத்தப்பட்டது தொடர்பாக தூத்தூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் என்பவரிடம் புகார் கொடுத்துள்ளார். எந்தவித நடவடிக்கையும் இல்லாத நிலையில், கண்ணன் மற்றும் அவரது உறவினர்கள் விஜியை கண்டுபிடித்து, மற்றொருவருக்கு விஜியை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். பெண்ணை கண்டுபிடித்து திருமணம் செய்து கொடுத்தது தொடர்பாகவும், தங்களது குடும்பத்திற்கு அஜித்குமார் குடும்பத்தால் ஏதாவது பிரச்சினை ஏற்படலாம் அதற்கு தாங்கள் பாதுகாப்பு தரவேண்டும் என்றும் தூத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரிடம் கண்ணன் குடும்பத்தினர் தகவல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக, அஜித்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் அருண்குமார், வினோத்குமார், விஜய், முத்து உள்ளிட்டோர் அவ்வப்போது மதுஅருந்தி விட்டு கண்ணன் குடும்பத்தினரை அசிங்கமாக திட்டுவதோடு உன்னை(கண்ணன்) கொலை செய்யாமல் விடமாட்டேன் எனவும் மிரட்டி வந்துள்ளனர். நேற்று(10 ந்தேதி) இரவும் கண்ணனை அஜித்குமார் அண்ணன் அருண்குமார் மிரட்டியுள்ளார். உடன் தூத்தூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டரிடம், கண்ணன் மிரட்டல் தொடர்பாக புகார் கொடுத்துள்ளார். ஆனால், சப் இன்ஸ்பெக்டர் கண்டுகொண்டதாக தெரியவில்லை. இந்நிலையில் இன்று காலை கண்ணன் வைப்பூரில் உள்ள மீன் குட்டைக்கு மீன் வாங்க சென்றபோது, அங்கு இருந்த அஜித்குமார், அவரது அண்ணன் அருண்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் கண்ணனிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது அருண்குமார் தான் வைத்திருந்த கத்தியால் கண்ணனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துவிட்டார். அங்கு சென்ற கண்ணன் உறவினர்கள் கண்ணனின் உடலை தூத்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து போட்டு, கண்ணணை கொலை செய்தவர்களை கைது செய்ய கோரியும், பலமுறை பிரச்சினை தொடர்பாக புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் காவல் நிலையத்திலும், காவல் நிலையம் முன்பும், கண்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப மறுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த காவல் உயர் அதிகாரிகள் கொலை சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில், கண்ணனின் உடல் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் தூத்தூர் காவல் நிலையம் முன்பு பல மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Updated On: 11 July 2021 8:34 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  2. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  3. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  4. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  5. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  6. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  10. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!