/* */

அரியலூர்: தோட்டக்கலைத்துறை திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

அரியலூர்: தோட்டக்கலைத்துறை திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
X

அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை திட்ட பணிகளை கலெக்டர் ரமணசரஸ்வதி ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியநாகலூர் மற்றும் அஸ்தினாபுரம் ஊராட்சிகளில் தோட்டக்கலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியம், பெரியநாகலூர் ஊராட்சியில் காமராஜ் என்பவரின் 1.15 ஏக்கர் பரப்பளவு உள்ள விவசாய நிலத்தில் பயிர் செய்யப்பட்டிருந்த மிளகாய் பயிர் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்டு, தற்பொழுது பாதிப்புக்குபின் மிளகாய் பயிர் பராமரிக்கப்பட்டு வருவதையும், அதன் ஊடு பயிராக சின்ன வெங்காயம் பயிர் செய்யப்பட்டுள்ளதையும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், விவசாயிகளிடம் மழைக்கு பின் மிளகாய் பயிர் பராமரிப்பதற்காக மேற்கொண்ட பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, அஸ்தினாபுரம் ஊராட்சியில் பழனிசாமி என்பவரின் 1.50 ஏக்கர் பரப்பளவு உள்ள விவசாய நிலத்தில் வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட சம்பங்கி பூ வயலினை பார்வையிட்டு, பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து, கணக்கெடுக்கும் பணி நடைபெற்றபோது விவரங்கள் முறையாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து, கீழப்பழுர் அரசு தோட்டக்கலை பண்ணைiயினை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள 70,000 முந்திரி கன்றுகள், வரும் தைப்பட்டத்தில் பயிர் செய்வதற்காக தயார் நிலையில் உள்ள 2 இலட்சம் கத்தரிச் செடிகள், 1 இலட்சம் மிளகாய் செடிகள் மற்றும் விவசாயிகளுக்கு விற்பனைக்காக 10,000 தேக்கு மரக்கன்றுகள், 9,000 தென்னங்கன்றுகள், 1,000 புளியங்கன்றுகள், 3,000 மல்லிகைச் செடிகள் பயிர் செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளதை பார்வையிட்டு, விற்பனை செய்யப்படும் முறைகள் குறித்தும், தோட்டக்கலை பண்ணையின் செயல்பாடுகள் குறித்தும், ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுரைகளை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் இரா.பழனிச்சாமி, தோட்டக்கலை துணை இயக்குநர் ப.ஆனந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சு.சண்முகம் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 24 Dec 2021 10:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  2. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  4. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  9. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  10. வீடியோ
    போராட்டங்களை மக்கள் மீது திராவிட அரசுகள் தினிக்குது !#protest #dmk...