/* */

தமிழக அரசின் திட்டங்கள் கடைக்கோடி பொதுமக்களுக்கும் சென்று சேருவது உறுதி

அரியலூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் கடைக்கோடி பொதுமக்களுக்கும் சென்று சேருவது உறுதி செய்யப்படும் என்றார் மாவட்டகலெக்டர்

HIGHLIGHTS

தமிழக அரசின் திட்டங்கள் கடைக்கோடி பொதுமக்களுக்கும் சென்று சேருவது உறுதி
X

ஓராண்டு சாதனை மலரை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பெற்றுக்கொண்டார்.


அரியலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் தி;ட்டங்கள் கடைக்கோடி பொதுமக்களுக்கும் சென்று சேர்வது உறுதி செய்யப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழக அரசு ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'ஓயா உழைப்பின் ஓராண்டு - நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம்" என்ற ஓராண்டு சாதனை மலரை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, (07.05.2022) வெளியிட்டார். அதை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பெற்றுக்கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டு காலத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்ள். அதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் ஓராண்டில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தயாரிக்கப்;பட்டுள்ள 'ஓயா உழைப்பின் ஓராண்டு - நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம்" என்ற ஓராண்டு சாதனை மலர் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சாதனை மலரில் அரியலூர் மாவட்ட வளர்ச்சிக்கு அரசு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட மொத்த வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது. மேலும், துறை வாரியாக மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்;டங்கள், முடிவுற்ற திட்டப் பணிகள் போன்றவை குறித்தும் இடம் பெற்றுள்ளது. அரியலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்படும் அனைத்துத் திட்டங்களும் பொதுமக்களின் நலனுக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்ட மக்களின் நலனை மேம்படுத்தும் வகையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது. இந்த வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பயனாக அரியலூர் மாவட்டத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதை படிம (பாசில்) பூங்கா அமைக்கவும், சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு சிமெண்ட் லாரிகள் சென்று வரும் வகையில் தனி சாலை அமைத்தல், அரியலூர் பேருந்து நிலையம் மேம்பாடு, அரியலூர் நகராட்சி, உடையார்பாளையம் பேரூராட்சியில் சந்தை மேம்பாடு, அரியலூர் மாவட்டத்திற்கு கூட்டுக் குடிநீர்; திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து தமிழக அரசுக்கு உரிய கருத்துருக்கள் அனுப்பப்பட்டு, திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் காக்கும் வகையில் செயல்படுத்தி வரும் திட்;டங்கள் அரியலூர் மாவட்டத்திலுள்ள கடைக்கோடி பொதுமக்களுக்கும் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் சிவக்குமார், இணை இயக்குநர்கள் பழனிசாமி (வேளாண்மை), மரு.ஹமீதுஅலி (கால்நடைப்பராமரிப்பு), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அ.பூங்கோதை, மின்சார வாரிய செயற்பொறியாளர் பி.அய்யப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் போ.சுருளிபிரபு மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Updated On: 7 May 2022 12:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  7. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  8. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  9. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  10. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...