/* */

சிறப்பு முகாமில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்கள், பணியாளர்கள் மருத்துவ குழுவின் சான்றிதழ் பெற்று பணிக்கு வரவேண்டும்

HIGHLIGHTS

சிறப்பு முகாமில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
X

தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்கள், பணியாளர்கள் மருத்துவ குழுவின் சான்றிதழ் பெற்று பணிக்கு வரவேண்டும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட தகவல்: அரியலூர் சுகாதார பகுதி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தோற்று தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில், நோயினை கட்டுப்படுத்தும் பொருட்டு, அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள், இன்றும் நாளையும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நடைபெறும் சிறப்பு மருத்துவ குழு முகாமில் கலந்துகொண்டு, தடுப்பு ஊசிகளை செலுத்தி கொள்ளவேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மருத்துவ குழுவின் சான்றிதழ் பெற்று பணிக்கு வரவேண்டும். மேலும், தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், கூடுதல் தடுப்பு நடவடிக்கைகளுடன் இருக்கவேண்டும் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 30 Aug 2021 8:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்