/* */

அரியலூரில் தானியியங்கி எந்திரத்தின் மூலம் உடனடி புதிய வாக்காளர் அடையாள அட்டை

தானியியங்கி அச்சிடும் எந்திரத்தின் மூலமாக உடனடியாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையினை பெற்று பயன்பெற கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

அரியலூரில் தானியியங்கி எந்திரத்தின் மூலம் உடனடி புதிய வாக்காளர் அடையாள அட்டை
X

பைல் படம்.

தானியியங்கி எந்திரத்தின் மூலம் உடனடி புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பில், வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே வாக்காளராக இடம்பெற்று, தொலைந்து போன, சேதமுற்ற புகைப்படத்துடன் கூடிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டைக்கு (Elector's Photo Identity Card) மாற்றாக புதிய வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கு வாக்காளர் தங்கள் எல்லைக்குட்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரி / வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அல்லது உதவி வாக்காளர் பதிவு அதிகாரி / வட்டாட்சியர் அலுவலகத்தில்அமைந்துள்ள தேர்தல் பிரிவில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை பெறவதற்கான விண்ணப்ப படிவத்தை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை முழுமையாக பூர்த்தி செய்து அவ்வலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

அல்லது http://www.nvsp.in என்ற இணையத்தள முகவரியின் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கப்பட்ட மனுக்கள் உரிய விசாரணை அலுவலரால் தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, விண்ணப்பமானது ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு, விண்ணப்ப படிவத்தில் அளித்துள்ள விண்ணப்பதாரரின் கைபேசிக்குகுறியீட்டு எண்ணானது (QR-CODE) அனுப்பப்படும்.

அவ்வாறு குறியீட்டு எண் கிடைக்கப்பெற்ற பின்பு, அக்குறியீட்டு எண்ணை அரியலூர் மாவட்ட ஆட்சியரக தேர்தல் பிரிவில் இயங்கும் மாவட்ட தொடர்பு மையம் / வாக்காளர் உதவி மையத்தில் காண்பித்து (District Contact Centre) தானியியங்கி அச்சிடும் எந்திரத்தின் (Kiosk Machine) மூலமாக உடனடியாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையினை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 21 Feb 2022 10:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்