/* */

அரியலூர்: 2-ம் கட்ட கொரோனா தடுப்பூசி பணியை கலெக்டர் ஆய்வு.

அரியலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி பணியினை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

அரியலூர்: 2-ம் கட்ட கொரோனா தடுப்பூசி பணியை கலெக்டர்  ஆய்வு.
X

அரியலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி பணியினை  கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு  செய்தார்.


அரியலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று (19.09.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதல்வர் அறிவுரையின்படி, இரண்டாம் கட்டமாக மாபெரும் கொரோனா வைரஸ் மாபெரும் தடுப்பூசி முகாம் அரியலூர் மாவட்டத்தில் 200 இடங்களில் தகுதியுடைய பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் முதற்கட்டமாக நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் 382 முகாம்களில் 39386 தகுதியுடைய பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாமில் அதிக அளவிலான பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் வீடுவீடாக சென்று கணக்கெடுப்பு பணிகள் மூலம் ஊக்குவிப்பு செய்யப்பட்டு, ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செயயப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா வைரஸ் பற்றியும் தடுப்பூசி நன்மைகள் பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கி, முகாம் நடைபெறும் இடங்கள், நேரம் உள்ளிட்டவைகள் மூலமாக பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று நடைபெற்று வரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், தடுப்பூசி செலுத்த வருகை தந்த பொதுமக்களிடம் 18-வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் பயன்கள் குறித்து அருகிலுள்ள பொதுமக்களுக்கும் தெரிவித்து 100 சதவீதம் கொரோனா செலுத்தப்பட்ட மாவட்டமாக அரியலூர் மாவட்டத்தை மாற்றிட அனைத்து பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

அரியலூர் நகராட்சி பகுதியில் தன்னார்வலர்கள் சார்பாக வழங்கப்பட்ட மளிகை பொருட்களை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு வழங்கினார். நகராட்சியின் சார்பில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவதற்கான கூப்பன் வழங்கப்படுவதையும் அதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பூர்த்தி செய்து பெட்டியில் போடுவதை பார்வையிட்டார்.

முன்னதாக, மாவட்ட கலெக்டர், அரியலூர் புதிய நகராட்சி அலுவலகம், பழைய நகராட்சி அலுவலகம், ஆர்.சி. தூய தெரசா துவக்கப்பள்ளி, அம்பேத்கார் நகர், கல்லங்குறிச்சி ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பு உள்ளதா என கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, கோட்டாட்சியர் ஏழுமலை (அரியலூர்), நகராட்சி ஆணையர் (பொ) தமயந்தி வட்டாட்சியர் ராஜமூர்த்தி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.

Updated On: 19 Sep 2021 8:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  2. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  3. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  5. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  6. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  7. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  8. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்