/* */

அரியலூரில் மாணவர்கள் பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்டத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

அரியலூரில்  மாணவர்கள் பங்கேற்ற  செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி
X

அரியலூர் மாவட்டத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.


சர்வதேச அளவிலான 44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் 28.07.2022 முதல் 10.08.2022 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து மாவட்டங்கள் தோறும் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் ஒற்றுமைத் திடலில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இவ்விழிப்புணர்வு பேரணி அரியலூர் ஒற்றுமை திடலில் துவங்கி சத்திரம் தேரடி வழியாக அண்ணாசிலையை சென்றடைந்து நிறைவடைந்தது. இப்பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பேரணியில் கலந்துகொண்டோர் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்று பொது மக்களிடையே செஸ் போட்டிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவில், வட்டார அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருவதுடன் இரு சக்கர வாகன பேரணி, மாரத்தான், மஞ்சைப்பை விநியோகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மூலம் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்தி;ன் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்;.

இப்பேரணியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், வருவாய் கோட்டாட்சியர் குமார், வட்டாட்சியர் குமரைய்யா, ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 July 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  2. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  3. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  4. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  5. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  7. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  8. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  10. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!