/* */

இந்திய அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார் அரியலூர் வீரர் கார்த்திக்

தமிழக வீரர் அரியலூர் கார்த்திக் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் கோலை பதிவு செய்துள்ளார்.

HIGHLIGHTS

இந்திய அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார் அரியலூர் வீரர் கார்த்திக்
X

மகன் கோல் அடித்ததை பக்கத்து வீட்டு டிவியில் பார்த்தனர் அரியலூர் கார்த்திக்கின் பெற்றோர்.

அரியலூர் - ஆசிய கோப்பைக்கான இந்தியா - பாகிஸ்தான் முதல் போட்டியில் முதல் கோலை பதிவு செய்த தமிழக வீரர் அரியலூர் கார்த்திக் குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

இன்று இந்தோனேஷியாவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கான ஹாக்கி போட்டி தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஆட்டம் ஆரம்பித்ததும் இந்திய அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார்‌ தமிழகத்தை சேர்ந்த அரியலூர் வீரர் கார்த்திக்.

தங்கள் இல்லத்தில் உள்ள டிவியில் அந்த ஒளிபரப்பு இல்லாத காரணத்தினால் பக்கத்து வீட்டில் டி.வி.யை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தனர் கார்த்திக்கின் பெற்றோர்கள்.

அரியலூர் நகரை சேர்ந்த கார்த்திக் 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் இருந்து இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவருடைய தந்தை செல்வம் வங்கியில் இரவு நேர காவலராக பணியாற்றி தற்போது அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் காவலராக பணியாற்றி வருகின்றார். தாய் வளர்மதி வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்து வீட்டு வேலை செய்து கார்திக்கை படிக்க வைத்துள்ளார்.

இந்நிலையில் கார்த்திக் 7 ஆம் வகுப்பு வரை அரியலூரில் உள்ள தூய மேரி மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். பின்னர் சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ யில் 7 முதல் 10 வரை படித்துள்ளார்.

பின்னர் கார்த்திக்கின் விளையாட்டு திறனை பார்த்த திருச்சி தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர் கார்த்திக்கை அழைத்து விளையாட்டு திறனை மேம்படுத்தியுள்ளார். பின்னர் விளையாட்டு திறனை பார்த்த கோவில்பட்டி எஸ்.எஸ் துரை சாமி நாடார் கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்து வருகின்றார்.

அவரது விளையாட்டு திறனை பார்த்த பெங்களூர் சாய் விளையாட்டு மையத்திற்கு எக்லான்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். அங்கு பல போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.

தற்போது இந்தோனேஷியால் நடைபெறயிருக்கும் ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணியில் முன்கள ஆட்டக்காரராக விளையாட‌ தேர்வு செய்யப்பட்டு முதல் கோலை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த கார்த்திக் விளையாட்டுக்காக தன்னுடைய விடா முயற்சியில் மற்றும் தன்னுடைய ஆட்ட திறனால் 20 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளது அரியலூருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இன்று சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் கோலை பதிவு செய்துள்ளார்.

Updated On: 24 May 2022 11:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!