/* */

மின் மோட்டாரை மானியத்துடன் வாங்க அரியலூர் கலெக்டர் வேண்டுகோள்

மின் மோட்டாரை மானியத்துடன் வாங்க அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

மின் மோட்டாரை மானியத்துடன் வாங்க அரியலூர் கலெக்டர் வேண்டுகோள்
X

அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் வேளாண் நிலத்தில் நீர்ப்பாசனத்திற்கு பி.வி.சி. பைப் வாங்க ரூ.15 ஆயிரம் மானியமும், நில மேம்பாட்டிற்காக புதிய மின் மோட்டார் அல்லது பழைய மின் மோட்டாருக்கு பதில் புதிய மின் மோட்டார் வாங்க ரூ.10 ஆயிரம் மானியமும் வழங்கப்படுகிறது.

விண்ணப்பதாரர் இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராகவும், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விவசாயத்தை தொழிலாக கொண்டவராகவும், இதுவரை தாட்கோ மானியம் பயன்பெறாத சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கும் ஏற்கனவே, தாட்கோ மூலம் நிலம் வாங்குதல், நிலம் மேம்பாடு மற்றும் துரித மின் இணைப்பு ஆகிய திட்டங்களில் பயனடைந்தவரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். பி.எம்.கே.எஸ்.ஒய். திட்டம் மற்றும் வேளாண் தோட்டக்கலை திட்டத்தில் மின் மோட்டார் பெற மானியம் பெற்றிருந்தால் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.

இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர்களின் சாதிச்சான்று, வருமானம் சான்று, குடும்பஅட்டை. இருப்பிடச்சான்று, பாஸ்போர்ட் புகைப்படம், சிட்டா, பட்டா, அடங்கல், அ-பதிவேடு, புல வரைப்படம், ஜி.எஸ்.டி.ஐ.என். உடன் கூடிய விலைப்புள்ளி ஆகிய ஆவணங்களை கொண்டு application.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் ஆதிதிராவிட விண்ணப்பதாரர்களும், fast.tahdco.com என்ற இணையதளத்தில் பழங்குடியின விண்ணப்பதாரர்களும் பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறும், கூடுதல் விவரங்கள் பெற அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள அறை எண் 225, 2-வது தளம், தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04329- 228315-ல் தொடர்புகொள்ளலாம். இந்த வாய்ப்பினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 4 April 2022 2:32 PM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  7. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
  9. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  10. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்