/* */

நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு

அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

HIGHLIGHTS

நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு
X

பைல் படம்.

அரியலூர் முதன்மை மாவட்ட நீதிபதி / மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் எஸ்.மகாலட்சுமி விடுத்துள்ள செய்திகுறிப்பில், அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக பணிபுரிய கீழ்கண்ட பொது பயன்பாட்டு சேவை துறைகளில் ஏதேனும் ஒன்றில் பணியாற்றிய போதுமான அனுபவமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயணிகள் அல்லது பொருட்களை விமானம், சாலை, நீர் போக்குவரத்து மூலம் கெர்ணடு செல்வதற்கான போக்குவரத்து சேவை, தபால், தந்தி அல்லது தொலைபேசி சேவை, பொதுமக்களுக்கு மின்சாரம், ஒளி அல்லது நீர் வழங்குதல், பொது பாதுகாப்பு அல்லது சுகாதார அமைப்பு, மருத்துவமனை அல்லது மருந்தக சேவை, காப்பீட்டு சேவை, கல்வி அல்லது கல்வி நிறுவனங்கள், வீட்டு வசதி மற்றும் ரியல் எஸ்டேட்.

உறுப்பினர் காலி இடம் - 02, வயது வரம்பு – 62 வயதிற்குட்பட்டவர்கள்

நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர்களின் நியமனம் மதிப்பூதியம் இதர படிகள், பணி நியமன காலம் போன்றவை சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் சட்டம் (சட்ட திருத்தம் 2002 மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கு உட்பட்டது.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் https://district.ecourts.gov.in/ariyalur என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் ரூ.10-க்கான அஞ்சல் தலையுடன் கூடிய சுய முகவரி கொண்ட உறையை, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களோடு இணைத்து தலைவர் / முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, அரியலூர்-621704 என்ற முகவரிக்கு 21.06.2022 அன்று மாலை 6.00 மணிக்குள் பதிவுத் தபால் மூலம் மட்டுமே கிடைக்கும்படி அனுப்ப வேண்டும் என முதன்மை மாவட்ட நீதிபதி / மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு தலைவர் எஸ்.மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

Updated On: 7 Jun 2022 8:49 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    வணிகர் சங்க பேரமைப்பு: சத்தியில் துவக்க விழா ஆலோசனைக் கூட்டம்
  2. இந்தியா
    மிசோரம் கல்குவாரியில் பாறை சரிந்து 14 பேர் பலி
  3. ஆன்மீகம்
    வெந்நீர் அபிஷேகம் நடக்கும் அதிசய சிவன் கோவில்!
  4. லைஃப்ஸ்டைல்
    கடனாகக் கொடுக்கக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா?
  5. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே ,கத்தியை காட்டி மிரட்டி வியாபாரிடம் வழிப்பறி; மூன்று...
  6. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே மூதாட்டி கொலை; பேரனை தேடும் போலீசார்
  7. கல்வி
    கல்விக் கடன் பெறத் திட்டமிடும் மாணவர்களுக்கு முக்கியம்
  8. வீடியோ
    Stalin ஆட்சி - Kamarajar ஆட்சி Comparison பண்றதா ?#mkstalin #dmk...
  9. கிணத்துக்கடவு
    மதுக்கரையில் 5 கிலோ கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    சப்பாத்தியை இனிமேல் நெய்யுடன் சாப்பிடுங்க!