கடனாகக் கொடுக்கக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா?

கடனாகக் கொடுக்கக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா?
X

கடனாகக் கொடுக்கக் கூடாத பொருட்கள் குறித்து  தெரிந்துக் கொள்ளுங்கள் (மாதிரி படம்)

நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை கண்டிப்பாக யாரேனும் இரவு நேரங்களில் கேட்கும் போது கடனாக தரக்கூடாது.

கடனாகக் கேட்டால் தரக்கூடாது என்றும், அப்படிக் கொடுத்தால் நம் வீட்டில் இருக்கும் செல்வமும் அதோடு சேர்ந்து போய்விடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அத்தகைய பொருட்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

இரவில் மற்றவருக்குக் கொடுக்கக்கூடாத பொருட்கள்; நூல், எண்ணெய், காசு, தயிர், இரும்பு பொருட்கள் ஆகியவையாகும். அரிசி தானம் இயல்பாகவே செய்வது நல்லது. ஆனால், வீட்டில் வைத்திருக்கும் அரிசியை எடுத்து அக்கம் பக்கம் கடனாக கொடுத்தால் வீட்டில் உள்ள மகிழ்ச்சி போய்விடும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, அரிசி சுக்ரனுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இதனால் அரிசியை கடன் கொடுக்கும்போது சுக்ர தோஷம் ஏற்படும். இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்படும்.

கடுகு எண்ணெய், எள் ஆகியவை சனி பகவானுடன் தொடர்புடையது. சனிக்கிழமைகளில் கடுகெண்ணெய்யை கோயிலில் கொண்டு கொடுக்கலாம். ஆனால், பக்கத்து வீட்டாருக்குக் கடன் கொடுக்கக் கூடாது. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை கடன் கொடுக்கக்கூடாது. நம் வீடுகளில் கண்டிப்பாக மஞ்சள் வைத்திருப்போம். மஞ்சள் வியாழன் கிரகத்தோடு தொடர்புடையது. மஞ்சளை கடன் கொடுக்கும் போது குரு தோஷம் உண்டாகும். அடுத்து பூண்டு, வெங்காயம் கேதுவுடன் தொடர்புடையது. இதை கடனாகக் கொடுக்கும்போது வீட்டில் செழிப்பு நின்று விடும். உப்பில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். இதை கடன் கொடுக்கும்போது நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

நாம் பயன்படுத்திய செருப்பு, துணிமணிகள், பூஜை பொருட்களை மற்றவருக்கு இரவலாகக் கொடுக்கக்கூடாது. பூஜை சம்பந்தமான பொருட்கள், சிலைகளை பராமரிக்க முடியவில்லை என்றால், கோயிலில் கொடுத்து விடலாம். ஆனால், யாருக்கும் கொடுக்கக்கூடாது. துடைப்பத்தை கண்டிப்பாக யாருக்கும் தரக்கூடாது. இது வீட்டில் பணப்பற்றாக்குறையை ஏற்படுத்தும்.

அன்னத்தை தானமாகக் கொடுத்து ஒருவர் அதன் மூலம் பசியாறினால் வீட்டில் உள்ள வறுமை நீங்கும். கிழிந்ததோ அல்லது பயன்படுத்திய துணியோ இல்லாமல் புதிதாக துணி எடுத்து மற்றவர்க்குக் கொடுக்கும்போது ஆயுள் விருத்தியாகும். தேனை தானமாகக் கொடுத்தால் குழந்தையில்லாத தம்பதியருக்குக் குழந்தை பிறக்கும்.

அரிசியை தானமாகக் கொடுக்கும்போது, பாவங்கள் நீங்கும். நெய் தானம் செய்தால் உடலில் உள்ள பல்வேறு நோய்கள் நீங்கும். பாலை தானமாகக் கொடுத்தால் வெகுநாட்களாக வீட்டில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் துக்கநிலை நீங்கும். தயிரை தானமாகக் கொடுத்தால் தம்பதியினரிடையே அன்யோன்யம் ஏற்படும்.

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!