வாடிப்பட்டி அருகே மூதாட்டி கொலை; பேரனை தேடும் போலீசார்

வாடிப்பட்டி அருகே மூதாட்டி கொலை; பேரனை தேடும் போலீசார்
X

பாட்டியை கட்டையால் அடித்துக் கொன்ற பேரனை போலீசார் தேடி வருகின்றனர். (மாதிரி படம்)

வாடிப்பட்டி அருகே எடுத்த பணத்தை திருப்பி கேட்ட பாட்டியை அடித்து கொலை செய்த பேரனை போலீசார் தேடி வருகின்றனர்.

வாடிப்பட்டி அருகே எடுத்த பணத் தை திருப்பி கேட்ட பாட்டியை அடித் து கொலை செய்த பேரனை போலீ சார் வலை தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பெரியார் நகரை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 84).தனது மகள் வெள்ளைத்தாய் மற்றும் 15 வயது பேரனுடன் வசித்து வந்தார். வெள்ளைத்தாய் கணவரை இழந்தவர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வள்ளியம்மாள் வைத்திருந்த ரூ. 1500 பணத்தை பேரன் எடுத்துச் சென்றார். அதன் பின் நேற்று முன் தினம் இரவு வீட்டிற்கு வந்த பேரனிடம் எடுத்த பணத்தை திருப்பி கேட்டார் .இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் வள்ளியம்மாளை கீழே தள்ளிய பேரன் அருகில் இருந்த கட்டையை எடுத்து தலையில் அடித்தார். இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே வள்ளியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய 15 வயது சிறுவனை வலை வீசி தேடி வருகின்றனர்.

Next Story
ai solutions for small business