/* */

கைகளில் மெகந்தி வரைந்து தேர்தல் விழிப்புணர்வு

கைகளில் மெகந்தி வரைந்து தேர்தல் விழிப்புணர்வு
X

கொரோனா தொற்று காரணமாக கரங்களை கோர்க்காமல் வரிசையாக நின்றும், கைகளில் மெகந்தி வரைந்து கொண்டும், 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணியை அரியலூரில் மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் நடத்தினர்.

இந்திய தேர்தல் ஆணையம் வரும் சட்டமன்றதேர்தல் 2021 ஐ முன்னிட்டு தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுவினரை சார்ந்த 500-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்ட மனித சங்கிலி பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட கலெக்டர் ரத்னா, கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட மகளிர் சுயஉதவிக்குழுவினர் அனைவரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒருவருக்கு ஒருவர் கரங்களை கோர்த்து மனித சங்கிலியாக நிற்காமல் தனித்தனியே வரிசையாக நின்றனர்.

மேலும் பேரணியில் கலந்து கொண்ட மகளிர் அனைவரும், தங்களது கைகளில் வாக்காளர் விழிப்புணர்வு மெகந்தி வரைந்து கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். பேரணியில் கலந்து கொண்ட மகளிர் அனைவரும் மரக்கன்றுகளை வழங்கியும், கலர் பலூன்களை கையில் ஏந்தியவாறும், தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்தவாறும், தேர்தல் தொடர்பான வாசகங்களை கோஷங்களாக எழுப்பியவாறும் நகரில் பேரணியாக சென்றனர்.இந்நிகழ்ச்சியில், திட்ட அலுவலர் (மகளிர்திட்டம்) தண்டபாணி, ஆர்டிஓ ஏழுமலை, நகராட்சி ஆணையர் (பொ) மனோகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன், வட்டாட்சியர் ராஜமூர்த்தி மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 11 March 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  9. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  10. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....