/* */

அரியலூரில் குற்றங்களை தடுக்க புது முயற்சி

அரியலூரில் குற்றங்களை தடுக்க புது முயற்சி
X

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் "தகவல் அளியுங்கள், குற்றத்தை நாங்கள் ஒழிக்கின்றோம்" என்ற அறிமுக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் அறிமுக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கிராம மக்களுக்கு மாவட்ட எஸ்.பி., சீனிவாசன் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலரை மக்களுக்கு அறிமுகம் செய்து, கிராம குற்றத் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டார்.அவர் பேசுகையில் தகவல் அளியுங்கள், குற்றத்தை நாங்கள் ஒழிக்கின்றோம் என்ற புதிய முயற்சியின் கீழ் ஒவ்வொரு காவல்நிலையத்திலும் உள்ள காவலர்களை ஒவ்வொறு கிராமங்களுக்கும் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்களாக நியமித்துள்ளோம்.

அவர்கள் உங்களுடைய கிராமத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஆகியோருடன் தொடர்பில் இருப்பார். இதன்மூலம் குற்றங்கள், கலவரங்கள் நடைபெறவுள்ள சூழ்நிலையை முன்கூட்டியே கண்காணித்து குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இக்கிராம குற்றத்தடுப்பு காவலருக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அரியலூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பாரதிதாசன், கயர்லாபாத் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜா, அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சுமதி, கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவில் தர்மகர்த்தாக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Updated On: 5 Feb 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  5. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  8. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  9. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  10. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!