/* */

2024 வரை சோனியாவே காங்.தலைவராக நீடிக்க முடிவு: துணைத்தலைவராக சிதம்பரம்,கெலாட்?

அகில இந்திய காங்.கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா உள்ளார்.இவரே 2024 ம்ஆண்டுவரை நீடிப்பார் என தெரிகிறது.

HIGHLIGHTS



அகில இந்திய காங். கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி

இந்தியாவில் கடந்த 10ஆண்டுகளாகவே பாஜ ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.காங். பதவியை விட்டு 2024ம் ஆண்டோடு பத்து ஆண்டுகள் பூர்த்தியடைய உள்ளது. இந்நிலையில் 2024 ம் ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் எப்படியாவது மீண்டும் ஆட்சியில் காங்கிரஸ் அமரவேண்டும் என திட்டம் தீட்டி வருகிறது.

இந்நிலையில் தற்போது ராகுல்காந்தி தலைவர் பதவியை ஏற்க மறுப்பு தெரிவிக்கிறார் என தெரிகிறது.இதனால் வேறு யாரையும் நியமிக்காமல் சோனியாகாந்தியே வரும் 2024 வரை தலைவராக நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இவருக்கு துணையாக ராஜஸ்தானை சேர்ந்த அசோக் கெலாட்டும், தமிழகத்தினைச் சேர்ந்த ப. சிதம்பரம் ஆகியோர் துணைத்தலைவர்களாக நியமிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தல்களில் கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் தொடர் தோல்விகளை சந்தித்து வந்துள்ளது.இந்நிலையில் இக்கட்சியைச் சார்ந்த மூத்த தலைவர்கள் 23 பேர் ஒன்றுகூடி கட்சியை மேலும் வலுப்படுத்த புதிய தலைவரை நியமிக்கவேண்டும் என்றும் பல சீர்திருத்த நடவடிக்கைகளை கட்சி தலைமை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அடுத்த மாதம் 20 ம்தேதிக்குள் உட்கட்சி தேர்தலைநடத்தி முடிக்க வேண்டும் என காங். தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் உட்கட்சி தேர்தலை நடத்தி நிரந்தர தலைவரை நியமிக்கும் வேலைகள் சூடுபிடித்தன.தேர்தல் ஆணைய விதிகளின் படிதான் உட்கட்சி தேர்தலை நடத்தவேண்டும். இதற்காக விரைவில் செயற்குழு கூட்டம் கூட உள்ள நிலையில் சோனியா காந்தி தனது மகன் ராகுலை தலைவராக நியமிக்க விரும்புகிறார். கட்சியின் ஒரு கோஷ்டியினர் இதற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

2024 ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால் இந்த நேரத்தில் ராகுலை தலைவராக நியமிக்க கட்சியின் மூத்த தலைவர்கள் ஒரு சிலர்தயக்கம் காட்டிவருகின்றனர். இதனால் ராகுல் தலைவர் பதவி ஏற்க தயக்கம் காட்டுவதால் சோனியாவே நீடிக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ராகுலும் அவரது தாயாரிடம் எனக்கு பதவி வேண்டாம் என சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது.

தற்போது யங்இந்தியா விஷயத்தில் சோனியா, ராகுல் ஆகிய இருவரிடமும் அமலாக்கத்துறையானது விசாரணை நடத்தி வருவதால் உட்கட்சி தேர்தல்நடத்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது.இந்நிலைமையை விளக்கி காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் விவகாரங்களை கையாளும் மதுசூதன் மிஸ்த்ரி தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து தெரிவிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

இப்பிரச்னை குறித்து காங். வட்டாரத்தில் தெரிவிக்கும்போது, ராகுல் தலைவர் பதவி ஏற்க தயக்கம் காட்டுவதால் சோனியாவே 2024 ம் ஆண்டு வரை கட்சியின் தலைவராக சோனியாவே நீடிக்க உள்ளார். துணைத்தலைவர்களாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை நியமிக்க சோனியா விரும்புகிறார். வடமாநிலங்களுக்கு கெலாட்டும், தென்மாநிலங்களுக்கு சிதம்பரமும் கவனித்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கிறார் சோனியா.

தேசிய துணைத்தலைவர்

கர்நாடக மாநிலத்தின் காங். தலைவரான சிவக்குமாரை தேசிய துணைத்தலைவராக நியமிக்க சோனியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அப்படி அவர்நியமிக்கப்பட்டால் அடுத்த ஆண்டில் கர்நாடகாவிலுள்ள நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக சித்தராமையா களமிறக்கப்படலாம் என திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் கட்சிரீதியாக பலநிர்வாக சீர்திருத்தங்கள், மாற்றங்களையும் சோனியா செய்ய உள்ளதாக தெரிகிறது.

கடந்த ஜூன் மாதம் சோனியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமாகி வீடு திரும்பினார். தற்போது மீண்டும் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்

Updated On: 15 Aug 2022 3:58 AM GMT

Related News

Latest News

  1. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  2. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  3. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  4. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  5. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  6. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  7. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  9. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  10. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!