மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!

மோடி என்ன தான் சொன்னார்..?  தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
X

டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்.,

மோடி நம் நாட்டில் வாழும் முஸ்லிம்களைப் பற்றித் தவறாகப் பேசவில்லை. அவர் ஊடுறுவல்காரர்களைப் பற்றித் தான் பேசினார்.

இது குறித்து பா.ஜ.க., மருத்துவப்பிரிவு பொறுப்பாளர் டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்., கூறியதாவது:

மோடி ராஜஸ்தான் பொதுகூட்டத்தில் இஸ்லாமிய வெறுப்பு பற்றி எதுவும் பேசவில்லை. அவர் பேசிய வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வழக்கம் போல் மோடி வெறுப்பு ஊடகங்களால் பெரிதாக்கப்படுகின்றது.

அவர் சொல்லவந்த விஷயம் சி.ஏ.ஏ சட்டம், குடியுரிமை சட்ட திருத்தம் பற்றியது. இந்த சட்டங்களை எல்லாம் ரத்து செய்வதாக காங்கிரஸ் சொல்கின்றது. அப்படி சொல்லும் காங்கிரஸ் கட்சியை நீங்கள் அதற்கு வாக்களித்தால் அந்நிய நாட்டினர் எளிதில் வந்து கொண்டே இருப்பார்கள். ஏராளமான குடியேற்றம் நிகழ்ந்து விடும். இப்படி வெளியில் இருந்து வந்த ஊடுறுவல்காரர்கள் நாட்டின் குடிமக்களாகிய உங்கள் இடங்களையெல்லாம் ஆக்கிரமிப்பார்கள்? இதையா விரும்புகின்றீர்கள் என்பது தான்.

அதாவது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அந்நிய நாட்டினர் ஊடுருவல் அதிகளவில் அனுமதிக்கப்படும். அதனால் தேசம் பாழாகும் என மக்களை நோக்கி சொன்னார். அவர் சொன்னது மிக தெளிவான தேசப்பாதுகாப்பு பற்றிய விஷயம். இதைத் தான் மோடி உள்நாட்டு இஸ்லாமியரை வெறுக்கின்றார் என திசை திருப்பி விடுகின்றது காங்கிரஸ் கட்சி. எதிர்கட்சிகளும் அதனை ஊதிப்பெரிதாக்குகின்றன. மோடி என்ன செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்பது தானே அவர்களது வேலை. அதைத்தான் இப்படி செய்கின்றனர். எதிர்க்கட்சிகள் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் என்பதற்கு இது தான் மிகச்சிறந்த உதாரணம். மக்கள் தான் கவனமாக இருத்தல் வேண்டும்.

அவர் சி.ஏ.ஏ., சட்ட ரத்தானால் என்னாகும் என சொல்லி தொடங்கினார். அதைஎல்லாம் விட்டு விட்டு ஒரு வரியினை மட்டும் பிடித்து அச்சமூட்டும் வன்மத்தை மகா பொய்யினை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள். அதாவது நாட்டின் எதிர்க்கட்சிகள் தான் தற்போது மிகவும் தவறான ஒரு பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றிக்கொண்டுள்ளனர். இதனை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மோடியை எதிர்க்க வேறு வழியில்லாத எதிர்க்கட்சிகள், அவர் பேசுவதை வேறு வகைகளில் திசைதிருப்பி, மக்களை குழப்ப முயன்று வருகின்றனர். இவ்வாறு கூறினார்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!