/* */

குஜராத்தில் நாளை சட்டசபை தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு 89 தொகுதிகள்:788 வேட்பாளர்கள்

gujarat assembly election , first phase tomorrow குஜராத் மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் இருகட்டங்களாக நடக்கிறது. நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்குகிறது.

HIGHLIGHTS

குஜராத்தில் நாளை சட்டசபை தேர்தல்  முதல் கட்ட வாக்குப் பதிவு  89 தொகுதிகள்:788 வேட்பாளர்கள்
X

குஜராத் மாநில சட்டசபைக் கட்டிடத்தின் அழகிய தோற்றம்  (கோப்பு படம்)

gujarat assembly election , first phase tomorrow

குஜராத் சட்டசபைப் பதவிக்காலமானது முடிவடைய உள்ளதால் சட்டசபைத் தேர்தலை இரு கட்டங்களாக நடத்துவதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. அந்த வகையில் நாளை டிச.1 ந்தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், டிச.5 ந்தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடக்கும் எனவும், இதற்கான வாக்கு எண்ணிக்கையானது டிச. 8 ந்தேதியன்று நடக்கும் அன்றைய தினமே இமாச்சல பிரதேச மாநிலத்தின் வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என ஏற்கனவே மத்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 182 ஆகும். இதில் முதல் கட்டத் தேர்தலாக நாளை 89 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதனால் இத்தொகுதிகளில் நேற்று முதல் கட்டபிரச்சாரமானது ஓய்ந்தது. இத்தொகுதிகள் அனைத்திலும் சேர்த்து மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.

gujarat assembly election , first phase tomorrow


குஜராத் சட்டசபைக்கான தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, முன்னாள் காங். தலைவர் ராகுல்காந்தி, ஆம்ஆத்மி தலைவர் கேஜ்ரிவால் (கோப்பு படம்)

gujarat assembly election , first phase tomorrow

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது டிச. 5 ந்தேதி அன்று நடக்கிறது. இதில் 93 தொகுதிகள் உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரமானது நேற்றுமாலையோடு முடிவடைந்ததால் நாளை வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடந்து வருகிறது.

ஆளும் கட்சியான பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவி வருவதால் யாருக்கு வாய்ப்பு? என்பது அறுதியாக சொல்லமுடியவில்லை.

நாளை நடக்க உள்ள முதல் கட்ட வாக்குப்பதிவானது 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு மட்டும் நடக்கிறது. மொத்தம் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் பெண்கள் மட்டும் 70 பேர். 25434 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இதில் 2.39 கோடி வாக்காளர்கள் நாளை நடக்கும் ஓட்டுப்பதிவில் வாக்களிக்க உள்ளனர்.

gujarat assembly election , first phase tomorrow


பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் காங்.தலைவர் ராகுல் காந்தி, டில்லிமுதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் (கோப்பு படம்)

gujarat assembly election , first phase tomorrow

பலத்த பாதுகாப்பு

ஆளும் கட்சியான பாஜவே தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடக்க வாய்ப்பிருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வாக்குப்பதிவு பணிக்காக இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 27 மற்றும் 28ந்தேதிகளில் பாஜவுக்கு ஆதரவாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தன் சொந்த மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொண்டார். கடைசி நாள் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும்கட்சியின் தேசிய செயலாளர், ஜே.பி.நட்டா , உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆகியோர் பாஜ வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொண்டனர்.

ஆம் ஆத்மி

ஆம்ஆத்மி வேட்பாளர்களும் களத்தில் உள்ளதால் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருந்தது. இம்முறை எப்படியும் அதிக இடங்களைக் கைப்பற்ற வேண்டும் எனஆம்ஆத்மி தீவிர பிரச்சாரத்தோடு தேர்தல் வாக்குறுதிகளையும் அள்ளி வீசியுள்ளது. அதாவது அரசு ஊழியர்களுக்கான பழைய பென்சன் திட்டம் , உள்ளிட்ட பலகோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளது. கடைசி நாள் பிரச்சாரத்தில் பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் பகவத்சிங்மான் அனல் பறக்கும் பிரச்சாரத்தினை மேற்கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக அகில இந்திய காங். தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தேர்தல் பிரச்சாரத்தினை குஜராத்தின் பல்வேறு இடங்களில் மேற்கொண்டார். அவருடன் உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்களும் தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொண்டனர்.

gujarat assembly election , first phase tomorrow


பாஜவின் தேர்தல் சின்னம் தாமரை, ஆம்ஆத்மியின் சின்னம் விளக்குமார், காங். கட்சியின் சின்னம் கை...(கோப்பு படம்)

gujarat assembly election , first phase tomorrow

ஆம் ஆத்மியுடன் போராடும் பாஜ

டில்லியில் கடந்த பல வருடங்களாக மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜவால் அம்மாநில சட்டசபை தேர்தலில்வெற்றி பெற முடியவில்லை. கேஜ்ரிவால் ஆம் ஆத்மி தான் ஆட்சி செய்து வருகிறது. அதேபோல் பஞ்சாப் சட்டசபை தேர்தலிலும் பாஜ, காங்கிரசுக்கு எதிர்ப்பாக ஆம் ஆத்மி களத்தில் இறங்கி வெற்றி வாகையினை சூடியது.

தற்போது குஜராத் மாநிலத்தில் நடக்க உள்ள சட்டசபைத்தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. இதனால் களத்தில் இறங்கி ஆம்ஆத்மியானது தீவிர பிரச்சாரத்தினை மேற்கொண்டது. மேலும் மக்களைக் கவரும் வகையிலான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. இதனால் ஆம் ஆத்மி கட்சி பாஜ, மற்றும் காங்கிரசுக்கு பலத்த எதிர்ப்பாக நிற்பதால் ஓட்டுகள் சிதற வாய்ப்புள்ளது. யாருடைய ஓட்டுகளைப் பிரிக்கும் என்று தெரியாததால் இரு கட்சிகளுமே சற்று எச்சரிக்கை அடைந்துள்ளது. பாஜ தலைவர்கள் ஆம் ஆத்மியின் செயல்பாட்டினைக்குறைக்க பல வகைகளில் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றனர்.

கேஜ்ரிவால் அதிர்ச்சி

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் கவனம்செலுத்திய கேஜ்ரிவாலை கலங்கடிக்கச் செய்யும் வகையில் டில்லி மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பாஜவின் முக்கிய தலைகள் களம் இறங்கியுள்ளது ஆம்ஆத்மிக்கு பெரும் அதிர்ச்சியைத்தந்துள்ளது. இதனால் தற்போது டில்லி முதல்வராக உள்ள கேஜ்ரிவால் அங்குள்ள மாநகராட்சி தேர்தலிலும் தீவிர கவனம் செலுத்த துவங்கியுள்ளார். குஜராத் செல்வதை குறைத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கேஜ்ரிவாலுக்கு வைத்த பாஜ செக் வேலைசெய்வதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். எது எப்படியோ ஆளும் கட்சியின் ஆட்சியானது திருப்தி தரவில்லை எனில் மக்களாகிய வாக்காளர்கள் புதியவர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது அனைத்து மாநிலங்களிலும் நடந்து வரும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தது போல் தற்போதைய முதல்வர்கள் கவனம் செலுத்தி ஆட்சி செய்துள்ளனரா? அது மக்களுக்கு திருப்தியா? என்பது எல்லாமே வரும் 8ந்தேதி தெரியவரும். அன்று அதற்கான விடை கிடைக்கும். பொறுத்திருந்துதான் பார்ப்போமே.

Updated On: 2 Dec 2022 4:49 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  2. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  3. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  10. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...