/* */

லியோ படத்தில் சூர்யா, பஹத்! சர்ப்ரைஸாக வைத்திருக்கும் லோகேஷ் கனகராஜ்

இந்த படத்தில் விஜய்யுடன் பஹத் பாசில் இணைகிறார் என்கிற தகவல் கிடைத்துள்ளது. மேலும் சூர்யாவும் இந்த படத்தில் சில காட்சிகள் நடிக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

HIGHLIGHTS

லியோ படத்தில் சூர்யா, பஹத்! சர்ப்ரைஸாக வைத்திருக்கும் லோகேஷ் கனகராஜ்
X

பஹத் பாசில், விஜய், சூர்யா படங்கள்

தளபதி 67 லியோ படத்தில் விஜய்யுடன் சூர்யா மற்றும் பஹத் பாசில் ஆகியோர் சர்ப்ரைஸாக வருவார்கள் என்கிறார்கள். இதனை மிக ரகசியமாக வைத்திருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.

தளபதி விஜய், வம்சி இயக்கத்தில் கடைசியாக நடித்து வெளியே வந்த படம் வாரிசு. இந்த படத்தில் சரத்குமார் மகனாக நடித்திருந்தார் விஜய். மூழ்கப் போகும் தொழிலை தனது சாதுர்யத்தால் தூக்கி நிறுத்தும் வகையில் ஒரு பிசினஸ் பாஸ்ஸாக நடித்திருந்தார் விஜய். இந்த படத்துக்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பால் படம் வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கிறது.

என்னதான் வாரிசு படம் பயங்கர வசூல் நிலவரத்தைக் கொண்டிருந்தாலும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்துக்குதான் உண்மையில் அதி பயங்கர எதிர்பார்ப்பு இருக்கிறது. உண்மையில் இவர்கள் இருவரும் எப்போது சேர்வார்கள், எப்போது ஷூட்டிங் என்பது தொடங்கி படத்தில் யார் யார் இருக்கிறார்கள் யார் யாருடன் சேர்ந்து நடிப்பார்கள் யாருக்கெல்லாம் ஸ்க்ரீன் ஷேரிங் இருக்கிறது என பலரும் விவாதித்து வருகிறார்கள்.

யூடியூப்பை திறந்தாலே இதுகுறித்த பேச்சுதான் எல்லா இடங்களிலும் இருக்கிறது. சரி நாமும் விசாரணையைப் போட்டோம். அதில் லியோ படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என துலாவி கேட்ட போதும் எந்த அப்டேட்டும் கிடைக்கவில்லை. காரணம் லோகேஷ் கனகராஜ் குழு எந்த ரகசியத்தையும் வெளியில் விடக் கூடாது என மிகவும் கட்டுப்பாடோடு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சில கோலிவுட் செய்தியாளர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த படத்தில் விஜய்யுடன் பஹத் பாசில் இணைகிறார் என்கிற தகவல் கிடைத்துள்ளது. மேலும் சூர்யாவும் இந்த படத்தில் சில காட்சிகள் நடிக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

சூர்யாவும் விஜய்யும் ஒரே திரையில் வந்தால் திரையரங்கே அதிரும். ஆனாலும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. சூர்யாவும் விஜய்யும் சம காலத்தில் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் நிலையில், விஜய்யுடன் நடிக்க சூர்யாவும், சூர்யாவை தன் படத்தில் நடிக்க வைக்க விஜய்யும் ஒப்புக் கொள்வார்களா என்பது தெரியவில்லை.

முன்னதாக படத்தில் யார் யார் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியானது. அதில் மன்சூர் அலிகான், கௌதம் வாசு தேவ் மேனன், அர்ஜூன், மிஷ்கின் ஆகியோர் பெயர் உறுதி செய்யப்பட்டது. முக்கிய வில்லனாக சஞ்சய் தத் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 Feb 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்