/* */

கொலை படத்தில் நடிகை ராதிகாவின் புது கெட் அப்

நடிகை ராதிகா சரத்குமார், 'கொலை' படத்தில் மிரட்டலான வில்லி கேரக்டரில் கையில் சிகரெட்டுடன் அசத்தலாக நடித்து உள்ளார்.

HIGHLIGHTS

கொலை படத்தில்  நடிகை ராதிகாவின் புது கெட் அப்
X

நடிகை ராதிகா சரத்குமார் தமிழ்த்திரையுலகில் 1970-8௦ களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களிலும் கதாநாயகியாகக் கலக்கியவர். குறிப்பாக நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி போன்றோருடன் அதிகமான படங்களில் கதாநாயகியாக நடித்த பெருமைக்குரியவர்.

கரைந்தோடும் கால ஓட்டத்தில் ஒரு கட்டத்திற்குப் பிறகு குறிப்பிடத்தக்க குணச்சித்திர கதாபாத்திரங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிப்பு, நடிப்பு என தடம் மாற்றி சாதித்துவரும் ராதிகா, சிம்பு, தனுஷ், விஜய்சேதுபதி போன்ற முன்னணி நாயகர்களின் படங்களில் அம்மா, சகோதரி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் 'கொலை' படத்தில் வில்லி அவதாரம் எடுத்திருப்பதுடன், அல்ட்ரா மாடர்ன் டிரெஸ்சில் கையில் சிகரெட்டுடன், ஆண் வில்லன்களுக்கு இணையாக அவர்களுக்கே போட்டிப்போடும் விதமாக வித்தியாசமான வில்லி லுக்குடன் செம ஸ்டைலாக ராதிகா அமர்ந்திருக்கும் போஸ்டர் வெளியாகியது.

இந்த போஸ்டர் வெளியாகி அனைவரையும் அதிர வைத்ததோடு, ஈர்க்கவும் செய்து வருகிறது. கூடவே சர்ச்சையும் ஒருபுறம் எழுந்து வருகிறது. புகைப்பிடித்தல் கூடாது என்கிற பரப்புரையைக் கருத்தில் கொண்டு, ரஜினி, தனுஷ், விஜய் உள்ளிட்ட பலரும் அதுபோன்ற காட்சிகளில் நடிப்பதையும், போஸ்டருக்கு போஸ் கொடுப்பதையும் தவிர்த்து வருகின்றனர்.

இவ்வாறான சூழலில், ராதிகா இப்படி போஸ் கொடுத்திருப்பது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர் விமர்சனக்கணைகளைத் தொடுத்து வருகின்றனர்.

Updated On: 12 July 2022 4:42 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!