திருவண்ணாமலையின் இந்த வாரத்தின் சிறந்த காவல் ஆளினர்: எஸ்பி பாராட்டு

திருவண்ணாமலையின் இந்த வாரத்தின் சிறந்த காவல் ஆளினரை தேர்வு செய்து பாராட்டி சான்றிதழ் மற்றும் பண வெகுமதிகளை எஸ்பி வழங்கினார்.

Update: 2021-08-24 11:57 GMT

திருவண்ணாமலை இந்தவார சிறந்த  காவலர் விருதை எஸ்பி  வழங்குகிறார்

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஒவ்வொரு வாரமும் சிறப்பாகப் பணியாற்றும் காவலர் ஒருவரை தேர்ந்தெடுத்து அந்த வாரத்திற்கான சிறந்த காவலராக அறிவித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வை துவக்கியுள்ளார் இத்திட்டம் மக்கள் மத்தியில் மற்றும் காவலர்கள் மத்தியிலும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

பவர் பேங்க் என்ற ஆன்ட்ராய்டு செயலியில் 20000/- ரூபாய் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த நபருக்கு Paytm மூலம் இழந்த பணத்தை மீட்டு பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கில் வரவு வைக்க உதவியாக இருந்தமைக்காக  சைபர் கிரைம் (தொழில்நுட்ப பிரிவு) உதவி ஆய்வாளர் செந்தில் குமார் என்பவரை இந்த வாரத்தின் சிறந்த காவல் ஆளினராக தேர்வு (COP of The Week) செய்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், பாராட்டி சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கினார். 

Tags:    

Similar News