தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள்

அண்ணாமலையார் திருக்கோயிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Update: 2021-11-11 11:00 GMT

திருவண்ணாமலை தீப கொப்பரைகள்

கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபம் வருகின்ற 19ஆம் தேதி காலை பரணி தீபமும் மாலை மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு இன்று அண்ணாமலையார் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.     

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கோவையை சேர்ந்த பக்தர் நேர்த்திக்கடனாக இரண்டு மகா தீப கொப்பரைகளை வழங்கினார். இந்த கொப்பரைகள் பஞ்சலோகத்தில் செய்யப்பட்டது.

ஐந்தே முக்கால் அடி உயரம் கொண்ட இந்த கொப்பரைகளின் மேல்பாகம் 1,000 மில்லி மீட்டர் விட்டமும் கீழ்பாகம் 700 மில்லி மீட்டர் சுற்றளவும் கொண்டது ஒவ்வொன்றும் 130 கிலோ எடை கொண்டது.

இன்று காலை தீபத் திருவிழா இரண்டாம் நாள் திருவிழா உற்சவத்தில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ சந்திரசேகரர் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்தனர். 

Tags:    

Similar News