முறையாக நகராட்சி வரி செலுத்த ஆணையர் வேண்டுகோள்

திருவண்ணாமலை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைக்குமாறு ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்

Update: 2021-11-30 02:26 GMT

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம்

நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குத்தகை கடை வாடகை ,பாதாள சாக்கடை கட்டணம் போன்றவற்றை முறையாக செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைக்குமாறு  திருவண்ணமாலை   நகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட வெளியிட்ட செய்திக்குறிப்பில்

சாலை வசதி,தெரு விளக்கு,மழை நீர் வடிகால் வசதி போன்றவற்றை செய்து தர வரியை முறையாக செலுத்தினால் மட்டுமே செய்து தர இயலும். நகராட்சிக்கு அனைத்து வரி மற்றும் கட்டணம் மூலம் வர வேண்டிய ஆண்டு வருவாய் ரூ.10 கோடி. ஆனால் பல ஆண்டுகளாக பொதுமக்கள் முறையாக வரி செலுத்தாததால் 40 கோடிக்கு மேல் வரி நிலுவையாக உள்ளது.

பொதுமக்கள் முறையாக வரி செலுத்தி ஜப்தி நடவடிக்கை, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, கடைகள் பூட்டி சீல் வைப்பு, நீதிமன்ற நடவடிக்கைகள் போன்றவற்றை தவிர்க்கவும் என கூறியுள்ளார்

Tags:    

Similar News