அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை வலியுறுத்தி பேரணி

திருவண்ணாமலை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.

Update: 2024-05-26 02:19 GMT

திருவண்ணாமலை அரசியல் தொழில் பயிற்சி நிலையம்

திருவண்ணாமலை அரசியல் தொழில் பயிற்சி நிலையத்தில் 100 சதவீத மாணவர்கள் சேர்க்கை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.

திருவண்ணாமலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் அரசின் தொழிற்பெயர்ச்சி நிலையத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான 100 சதவீதம் மாணவர்களுக்கான சேர்க்கை இலக்கை அடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை வேங்கிக்கால் , அண்ணா நுழைவாயில் ,பேருந்து நிலையத்திலிருந்து மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மத்திய பேருந்து நிலையம், பெரியார் சிலை, அண்ணா சிலை, காந்தி சிலை, சேரடி தெரு, குயமட தெரு, அண்ணாமலையார் கோவில் வழியாக காமராஜர் சிலையை சென்றடைந்தது.

இங்க விழிப்புணர்வு பேரணிக்கு திருவண்ணாமலை அரசு தொழிற்பயிற்சி மையம் முதல்வர் தனசேகரன் தலைமை தாங்கினார்.  இதில் தொழிற்பயிற்சி நிலைய நிர்வாக அலுவலர் செல்வம், ஜமுனா மரத்தூர் அரசு தொழில் பயிற்சி நிலையம் முதல்வர் ஜெயசங்கர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் தியாகராஜன் மற்றும் பயிற்சி அலுவலர்கள், 30 தொழில் நுட்ப பணியாளர்கள்,  அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் 250 க்கும் மேற்பட்ட ஆண் பெண் பயிற்சியாளர்கள் பேரணியாக சென்று 100 சதவீத மாணவர் சேர்க்கை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்கள் தெரிந்துகொள்ளwww.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தினை பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் பொழுது தங்களது அசல் ஆவணங்களான மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் மற்றும் இடப்பெயர்வு சான்றிதழ் ஆகியன பதிவேற்றம் செய்யப்படவேண்டும் என துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர்.

Tags:    

Similar News