திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம்

கிரிவலம் செல்ல தடையின் காரணமாக ஏராளமான பக்தர்கள் நேற்றும் இன்றும் கிரிவலம் வந்தனர்

Update: 2021-10-19 16:17 GMT

இருந்தபோதிலும் இன்று  மற்றும் நாளை மறுநாள் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை சோமவார பிரதோ‌ஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

கிரிவல தடை தெரியவந்ததால் நேற்று முதல்  ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் சென்றனர். மேலும் இன்று அரசு விடுமுறை தினம் என்பதால் வெளிமாநில பக்தர்கள் அதிக அளவில் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்தனர்.  

இன்று அதிகாலை முதல் இரவு வரை பக்தர்கள் ராஜகோபுரம்  கோபுரம் முதல்  தெற்கு திருமஞ்சன கோபுரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர் . அண்ணாமலையார் கோவிலில் தரிசனத்திற்கு தடை இல்லை என்கிற காரணத்தால் நாளை அன்னாபிஷேகத்தை முன்னிட்டு மேலும் கூட்டம் அதிகரிக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் திருக்கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது..  முக கவசம் அணியாதவர்களை காவலர்கள்   முக கவசங்களை கொடுத்து உடனடியாக அணிய அறிவுறுத்தி கோவிலினுள் அனுப்புகின்றனர்.

Tags:    

Similar News