ஹெல்மெட் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு

திருவண்ணாமலையில், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி, போலீசார் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2022-03-22 01:19 GMT

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதை வலியுறுத்த போலீசார் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை எம்.எல்.ஏ. அலுவலகத்தை அடுத்த ரவுண்டானா அருகே திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தலைமையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி மற்றும் போலீசார், விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலை அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பிரசாரத்தில்,  தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூதன முறையில் முகம் பார்க்கும் கண்ணாடியை வாகன ஓட்டிகள் முன்பு காட்டி தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.. தலைக்கவசம் அணிவது குறித்து தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். விரைவில் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

Tags:    

Similar News