மார்கழி பிறப்பு: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2023-12-17 00:59 GMT

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார்

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை திருத்தலத்தில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு இன்று முதல் மார்கழி மாதம் முழுவதும் உற்சவ மூர்த்தியான அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் ஆலயத்தில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து மார்கழி மாதத்திள் நால்வரில் ஒருவரான சுவாமி மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல்கள் ஓதுவா மூர்த்திகளால் கருவறையில் பாடப்பட்டது.

மாணிக்கவாசகர் திருவெம்பாவை அருளிய இடம் திருவண்ணாமலை, ஆதியும் அந்தம் இல்லா அருள் பெறும் ஜோதியை என தொடங்கும் திருவெம்பாவை அருளிய திருத்தலம் திருவண்ணாமலை. 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 26-ந்தேதி மகா தீபத்திருவிழா நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் கார்த்திகை மாதம் நேற்றோடு முடிவடைந்து மார்கழி மாதம் பிறந்தது. மார்கழி மாத பிறப்பையொட்டி கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

பின்னர் சாமிக்கு தங்க கவசம், அம்மன் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

இதேபோன்று, கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில், 4,668 அடி உயரமுள்ள பர்வத மலையில், பிரம்மாம்பிகை சமேத மல்லிகாஜுனேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை பூத நாராயணன் கோவில், படவேடு லட்சுமி நரசிம்மர் கோவில், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில்களில், திருப்பாவை. திருவெம்பாவை பாடல்கள் பாடி வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News