மின்கட்டணம், வீட்டுவரி உயர்வு கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் மின்கட்டணம், வீட்டுவரி, சொத்துவரி உயர்த்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-14 10:17 GMT

 ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் மின்கட்டணம், வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் வரி உயர்த்தியதை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின்கட்டணம், வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் வரி உயர்த்தியதை கைவிடக் கோரி திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள அறிவொளி பூங்கா எதிரில் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வெங்கடேசன், குப்புரங்கன், பாஸ்கரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் முத்தையன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் தமிழ்நாட்டில் குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ.21 ஆயிரம் என சட்டப்படி அறிவித்திட வேண்டும். அரசு மற்றும் தனியார் துறைகளில் 240 நாட்கள் பணிபுரிந்த நிரந்தரமற்ற தொழிலாளர்களை நிரந்தரம் செய்திட வேண்டும். மின்கட்டணம், வீட்டு வரி, சொத்துவரி, குடிநீர் வரி உயா்த்தியதை கைவிட வேண்டும். மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களை 4 சட்ட தொகுப்புகளாக மாற்றியதை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏ.ஐ.டி.யு.சி.யை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News