மறைந்த மருத்துவர் குடும்பத்திற்கு காப்பீடு தொகை

குடும்ப பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மறைந்த மருத்துவர் விஜயலட்சுமியின் குடும்ப நலக் காப்பீட்டு தொகை வாரிசுகளிடம் வழங்கப்பட்டது

Update: 2021-12-09 13:57 GMT

மறைந்த மருத்துவர் விஜயலட்சுமியின் வாரிசுதாரருக்கு குடும்ப நலக் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது

போளூர் இந்திய மருத்துவ சங்க கூட்டம் போளூர் கிளை தலைவர் மருத்துவர் கலிமுல்லா தலைமையில் நடைபெற்றது.

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் குடும்ப பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மறைந்த மருத்துவர் விஜயலட்சுமியின் குடும்ப நலக் காப்பீட்டு தொகையாக ரூபாய் 18 லட்சத்திற்கான காசோலையை அவரின் வாரிசுதாரருக்கு மாநில துணைத் தலைவரும்,  குடும்ப பாதுகாப்பு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கணேசன் வழங்கினார்

பின்னர் இளம் மருத்துவர்களிடம்  திட்டத்தினை விளக்கிக் கூறிஇந்த திட்டத்தில் இணைவதன் அவசியம் குறித்து பேசினார்.

இந்நிகழ்வில் மருத்துவர்கள் சுகந்தி அன்பரசு , சிவராமன் ,அருண்குமார் மற்றும் ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News