சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேகம் முடியும் வரை மூலவர் தரிசனம் ரத்து

Murugan Swamy Temple - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைடுத்து சிறுவாபுரி கிராமத்தில் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டுபக்தர்களுக்குமூலவர் தரிசன அனுமதியில்லை என போர்டு வைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-09 08:00 GMT

மூலவர் தரிசன அனுமதி கிடையாது என தெரிவிக்க   வைக்கப்பட்டுள்ள பேனர். 


Murugan Swamy Temple - கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆலய திருப்பணிகள் நடைபெற்று வருவதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு மூலவர் தரிசனம் ரத்து செய்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரி கிராமத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இக்கோவிலில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்குன்றம் கும்மிடிப்பூண்டி பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்

இந்நிலையில் இக்கோவிலில்  6 செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் இணை தீபம் ஏற்றி வழிபட்டால் பக்தர்கள் கோரிக்கை தீரும் என்பது நம்பிக்கை உள்ளது இதனையடுத்து 2003 ஆம் ஆண்டு இக்கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்ற நிலையில் தற்போது 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

இதனை  முன்னிட்டு ஆலயத்தில் பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இன்று முதல் இம்மாதம் 21ஆம் தேதி கும்பாபிஷேகவிழா முடியும் வரை பக்தர்களுக்கு மூலவர் தரிசனம் ரத்து செய்யப்பட்டு ஆலயத்தின் நுழைவு வாயில் முன்பு ஆலயத்தின் சார்பில் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படுவது அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News