குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்

பொன்னேரி அருகே குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவிலில் 108 பெண்கள் பால்குட ஊர்வலம் நடந்தது.

Update: 2024-04-24 02:00 GMT

குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம் நடந்தது.

பொன்னேரி அருகே முத்துமாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பால்குட ஊர்வலம், மஞ்சளாடை அணிந்து ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த குண்ணமஞ்சேரியில் பழமை வாய்ந்த அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.முன்னதாக சிறப்பு பூஜையுடன் அங்குள்ள விநாயகர் கோவிலில் துவங்கிய ஊர்வலத்தில் மேளதாளம் முழங்க உடுக்கை சத்தம் ஒலிக்க நூற்றி எட்டு பெண்கள் மஞ்சளாடை அணிந்து பக்தியுடன் பால்குடம் தலையில் சுமந்து ஓம்சக்தி, பராசக்தி என்று முழங்கியபடி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கோவில் வந்தடைந்தனர்.

பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பால்குடங்களில் உள்ள பாலை கொண்டு முத்துமாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து பின்னர் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களாலும் திரு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு  முத்துமாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. நடத்தப்பட்டது.

இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று முத்துமாரியம்மனை வழிபட்டனர் பின்னர் ஆலயத்தின் சார்பில் அங்கு வந்திருந்த திரளான பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

Similar News